அமெரிக்கா- ஈரான் இடையில் நிரந்தர போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட பாகிஸ்தான் மத்தியஸ்தராக செயல்பட்டு வருகிறது. பாகிஸ்தானுடன் மேலும் சில நாடுகள் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. இதன் பயனாக கடந்த சில தினங்களுக்கு முன்னதாக பிரான்ஸ் நாட்டில் வைத்து ஜி-7 உச்சி மாநாடு முடிவடைந்த நிலையில் இடைக்கால போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதன்பின் சுவிட்சர்லாந்தில் டெக்னிக்கல் அளவிலான பேச்சுவார்த்தை இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து லெபனான் மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல் நடத்தியது. இதனால் கோபம் அடைந்த ஈரான் பேச்சுவார்த்தை நிறுத்தப்படுவதாக அதிரடியாக அறிவித்தது. அதோடு ஹார்முஸ் ஜலசந்தியை மூடப்போவதாகவும் அறிவித்தது.
சுவிட்சர்லாந்து பேச்சுவார்த்தையில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கலந்து கொள்ள இருந்தார். லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கு அவர் அதிருப்தி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நாளை சுவிட்சர்லாந்தில் டெக்னிக்கல் அளவிலான பேச்சுவார்த்தை தொடங்கப்படும் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.