உலகம்

அக்டோபர் 7 தாக்குதலுக்கு பழிதீர்த்த இஸ்ரேல்.. ஹமாஸ் பயங்கரவாதிகள் 4 பேரை படுகொலை செய்த பாதுகாப்பு படை

இஸ்ரேலின் சஹாப் ராணுவ நிலையம் மீது, ஹமாஸ் பயங்கவாத அமைப்பை சேர்ந்த நுக்பா படைப்பிரிவினர் தாக்குதல் நடத்தினர்.

இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் பயங்கரவாதிகள் மீது நடத்திய வான்வெளி தாக்குதலில் நான்கு பயங்கரவாதிகளை கொலை செய்து, அக்டோபர் 7 தாக்குதலுக்கு பழிதீர்த்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மீது கடந்த 2023 அக்டோபர் 7 அன்று, ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுமார் 1,200 பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு, 251 பேர் பயணக்கைதிகளாக கடத்தப்பட்டனர்.

மேலும் இஸ்ரேலின் சஹாப் ராணுவ புறக்காவல் நிலையம் மீது, ஹமாஸ் பயங்கவாத அமைப்பை சேர்ந்த நுக்பா படைப்பிரிவினர் தாக்குதல் நடத்தினர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, காசா சிறையில் சுமார் இரண்டு ஆண்டுகளாக சிறை வைக்கப்பட்டிருந்த இஸ்ரேல் கைதிகளை ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு விடுதலை செய்தது.

இந்த நிலையில் நுக்பா குழுவின் துணை தளபதி ஓஹாத் பென் என்பவரை கொலை செய்து அக்டோபர் 7 தாக்குதலுக்கு பழிதீர்த்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் பாதுகாப்பு படை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மத்திய காசாவில் நடத்தப்பட்ட இரண்டு தனித்தனி தாக்குதல்களில், 4 ஹமாஸ் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில், டையாப் அல் ரஹ்மான் ராடி, முகமது அபு ஹுஷில், முஸ்தபா ஹசன் ஒவேனி மற்றும் யூசுப் அயிடி ஆகியோர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT