இஸ்ரேல்-ஹிஸ்புல்லா இஸ்ரேல்-ஹிஸ்புல்லா
உலகம்

கடுமையான தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேல்- ஹிஸ்புல்லா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்

உள்ளூர் நேரப்படி இன்று மாலை 4 மணிக்கு தொடங்கவுள்ள போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்காவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

லெபனானில் இஸ்ரேல்- ஹிஸ்புல்லா இடையிலான மோதல்கள் ஒரே இரவில் (வியாழக்கிழமை) தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி மாலை 4 மணிக்கு போர்நிறுத்தத்தைத் தொடங்க இஸ்ரேலும் ஈரானின் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லாவும் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிகாரி தெரிவித்துள்ளார்.

போர் நிறுத்த பேச்சுவார்த்தை

ஹிஸ்புல்லாவும் இஸ்ரேலும் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளன என்று கூறிய அந்த அதிகாரி, அமெரிக்கா மற்றும் கத்தார் நாட்டு பேச்சுவார்த்தையாளர்கள் ஈரானின் உதவியுடன் இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்ததாகவும் தெரிவித்தார்.

இன்று முன்னதாக நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்களுக்குப் பிறகு, இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் தற்போது போர்நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன என்பதை நாங்கள் அறிந்துகொள்கிறோம் என்றார்.

மத்திய கிழக்கில் பரவலான போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான அமெரிக்க- ஈரான் இடைக்கால ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல்- ஹிஸ்புல்லா இடையிலான சண்டை சவாலாக அமைந்தது.

இஸ்ரேல் தாக்குதல்

வியாழக்கிழமை இரவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல்களில் லெபனானில் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேவேளையில், இந்தப் போரின்போது ஹிஸ்புல்லா நடத்திய மிகக்கொடிய தாக்குதல்களில் ஒன்றில் தெற்கு லெபனானில் நான்கு இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டனர்.

ஈரான் ஒப்பந்தத்தின்படி அமெரிக்கா, ஈரான் மற்றும் அவற்றின் கூட்டாளிகள் லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் ராணுவ நடவடிக்கைகளை உடனடியாகவும் நிரந்தரமாகவும் நிறுத்த வேண்டும் என்பது முதன்மையாக உள்ளது.