உலகம்

போருக்கு நிதியுதவி செய்கிறதா அமெரிக்கா? ரஷ்யாவிடம் டீசல் வாங்குவதற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடும் கண்டனம்!

தங்களது தற்காப்பு முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாகக் கூறிக்கொண்டு, மறுபுறம் எதிரி நாட்டுடன் வர்த்தகம் செய்வது ஏற்புடையதல்ல.

உக்ரைனின் பாதுகாப்பையும் தாண்டி அமெரிக்கா இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது தனது கூட்டாளிகளுக்குச் செய்யும் நியாயமற்ற செயல் என்றும் ஜெலன்ஸ்கி விமர்சித்துள்ளார்.

சர்வதேச சந்தையில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிப்பதற்காக ரஷ்யாவிடம் இருந்து பெருமளவில் டீசல் மற்றும் எரிபொருள் இறக்குமதி செய்யப் படும் என வெளியான அறிவிப்பு பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இது ரஷ்யாவின் போருக்கு நேரடியாக நிதியளிப்பதற்குச் சமம் என்று உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கடுமையாகச் சாடியுள்ளார்.

அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே எட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இந்த எரிபொருள் ஒப்பந்தம் குறித்துப் பேசிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, இது முடிவுக்கு வர வேண்டிய ஒரு போருக்கு மறைமுகமாகச் செய்யப்படும் நிதி முதலீடு என்று குற்றம் சாட்டியுள்ளார். ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் வாங்குவது மோதல்களைத் தணிப்பதற்குப் பதிலாக, அந்நாட்டின் ராணுவ நடவடிக்கைகளுக்குத்தான் பலம் சேர்க்கும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

கூட்டாளிகளுக்குச் செய்யும் துரோகம்

உக்ரைனின் பாதுகாப்பையும் தாண்டி அமெரிக்கா இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது தனது கூட்டாளிகளுக்குச் செய்யும் நியாயமற்ற செயல் என்றும் ஜெலன்ஸ்கி விமர்சித்துள்ளார். தங்களது தற்காப்பு முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாகக் கூறிக்கொண்டு, மறுபுறம் எதிரி நாட்டுடன் வர்த்தகம் செய்வது ஏற்புடையதல்ல என்றும், இது கூட்டாண்மை தர்மத்திற்கே எதிரானது என்றும் அவர் ஆவேசமாகத் தெரிவித்தார்.

உள்நாட்டில் உச்சத்தில் இருக்கும் எரிபொருள் விலை உயர்வை எவ்வாறாவது கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பேசி அமெரிக்கா இந்த டீசல் ஒப்பந்தத்தை முன்னெடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் இந்த நகர்வு உலக நாடுகளின் எரிசக்தி சந்தையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதோடு, மேற்குலக நாடுகளின் அரசியல் வட்டாரத்திலும் கடுமையான விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT