ஈரான் மீது கடந்த ஆண்டு பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 623 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக ஈரான் பெண்கள் மற்றும் குடும்ப விவகாரங்களுக்கான பிரதிநிதி ஜஹ்ரா பெஹ்ரூஸ் அசார் தெரிவித்துள்ளார்.
ஈரானில் கடந்த பிப்ரவரி தொடங்கி ஹார்முஸ் ஜலசந்தி விவகாரம் தொடர்பாக, இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது.
இதையடுத்து நவம்பர் 20 அன்று கொண்டாடப்பட்ட உலக குழந்தைகள் தினத்தில், பெண்கள் மற்றும் குடும்ப விவகாரங்களுக்கான பிரதிநிதி ஜஹ்ரா பெஹ்ரூஸ் அசார் மற்றும் ஈரானிய செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் பிர்ஹொசைன் கோலிவந்த் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய பெண்கள் நல அமைச்சர், 2025 பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில், அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 623 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும் இது மிகவும் கசப்பானது என்றும், ஈரானின் நம்பிகையையும், அதன் தலைவிதியையும் மாற்றி வடிவமைக்க வேண்டிய குழந்தைகள் உயிரிழிந்துள்ளதாக கூறினார்.
மினாபில் கொல்லப்பட்ட குழந்தைகளுக்கும், குறிப்பாக ஷஜாரே தய்யேபே மற்றும் ரஹ்பூயான் பள்ளிகளில் பலியானவர்களுக்கும் பெண்கள் நல அமைச்சர் அஞ்சலி செலுத்தினார்.
இதையடுத்து பேசிய பிஹொசன் கோலிவந்த், தாக்குதலில் ஈடுபடும் ஒவ்வொரு நாடுகளும், அந்த நாட்டின் குழந்தைகளை பாதுகாப்பது அவர்களின் கடமை என தெரிவித்தார்.
ஈரானில் கடந்த 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த 12 நாள் போரில், குறைந்தது 45 குழந்தைகள் உயிரிழந்ததாக அவர் கூறினார்.
ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்திற்கு (UNICEF) ஈரான் அனுப்பிய கடிதத்தில், 2025 பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் நடந்த 40 நாள் போரின்போது, 383 குழந்தைகள் கொல்லப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது.
மேலும் மிகவும் துயரமான சம்பவமாக மினாப் பள்ளி மீதான தாக்குதல் அமைந்ததாகவும், அந்த தாக்குதலில் 168 பள்ளி மாணவர்கள் உயிரிழந்ததாகவும் அவர் கூறினார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதல், ஒரு சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல் எனவும் கோலிவந்த் கூறினார்.
ஷஜாரே தய்யேபே பள்ளி மீதான தாக்குதல் மற்றும் பதிவான பிற சம்பவங்கள் குறித்து, பாரபட்சமின்மை மற்றும் வெளிப்படைத்தன்மையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் இழப்பீடு வழங்கவும் அவர் அழைப்பு விடுத்தார்.
ஆயுத மோதல்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவ சிகிச்சை, உடல் நலம் மற்றும் கல்வி உதவிகளை வழங்குமாறு யுனிசெஃப் மற்றும் பிற சர்வதேச அமைப்புகளை கோலிவந்த் வலியுறுத்தினார்.