உலகம்

ஈரான் அணு ஆயுதத்தை உற்பத்தி செய்வதற்கு சீனா, ரஷியா எதிர்ப்பு தெரிவிக்கிறது: அப்பாஸ் அராக்சி

ஈரானில் கடந்த 2003 ஆம் ஆண்டு அணு ஆயுத உற்பத்தியை தடை செய்யப்பட்டவையாக மறைந்த தலைவர் அயதுல்லா அலி கமெனி அறிவித்தார்.

ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்க தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அதற்கு நட்பு நாடுகளான சீனாவும் ரஷியாவும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.

ஈரானின் அதிகாரப்பூர்வ அணுசக்தி கொள்கையானது, அணு ஆயுதங்களை உருவாக்குதல், உற்பத்தி செய்தல், சேமித்து வைத்தல் மற்றும் பயன்படுத்துதல் ஆகியவற்றிற்கு தடை செய்கிறது.

ஈரானில் கடந்த 2003 ஆம் ஆண்டு இஸ்லாமிய சட்டத்தின் கீழ் அணு ஆயுதங்களும் அனைத்து பேரழிவு ஆயுதங்களும் தடை செய்யப்பட்டவையாக மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனி அறிவித்தார்.

இதையடுத்து பிப்ரவரி 2026 அலி கமெனியின் மரணத்திற்கு பிறகு, அவரது மகன் மொஜ்தபா கமெனியும் இந்த அணு ஆயுத தடை உத்தரவை பின்பற்றுவதாக தெரிவித்தார்.

ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் சூழலில், அணு ஆயுத உற்பத்தி கொள்கையை மாற்றம் செய்ய வலியுறுத்தி ஈரானின் மூத்த பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் முக்கிய தலைவர்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

இதற்கிடையில் 60 சதவீதம் வரை செறிவூட்டப்பட்ட யுரேனிய கையிருப்பை உள்நாட்டிலேயே ஈரான் வைத்துள்ளது.

மேலும் ஈரானில் இருந்து யுரேனியத்தை வெளியேற்றும்படி நிபந்தனை விதித்து வரும் அமெரிக்காவின் கோரிக்கையையும் ஈரான் நிராகரித்து வருகிறது.

இந்த நிலையில் அணுஆயுத உற்பத்தியை தொடங்க ஈரான் அதிகாரிகள் அழுத்தம் கொடுத்து வரும் சூழலில், தனது முந்தைய கொள்கையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி இன்று தெரிவித்துள்ளார்.

மேலும் ஈரான் அணுஆயுத உற்பத்தி கொள்கையில் மாற்றம் செய்வதை, சீனா மற்றும் ரஷியா ஆகிய நாடுகள் எதிர்த்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதற்கிடையில் சமீபத்தில் ஈரானின் அணு சக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.

இந்த சூழலில் சேதமடைந்த ஈரானின் அணு ஆயுத நிலையங்களை பார்வையிட விரும்புவதாக சர்வதேச அணுசக்தி முகமை தெரிவித்திருந்த நிலையில், தாக்குதலை தடுக்க தவறிய அணுசக்தி முகமைக்கு ஈரான் அரசாங்கம் தடை விதித்துள்ளது.

SCROLL FOR NEXT