உலகம்

ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 6 வீரர்கள் பலி - அமெரிக்கா தங்களை ஏமாற்றிவிட்டதாக ராணுவ மேஜர் புகார்

ஈரானில் ‘ஆபரேஷன் எபிக் ஃபியூரி’ என்ற ராணுவ நடவடிக்கையை கடந்த மார்ச் 1 அன்று அமெரிக்கா நடத்தியது.

ஈரானுக்கு எதிரான தாக்குதலில் 6 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து, அந்த நிகழ்வின் போது எந்த விதமான அவசர மருத்துவ சேவைகளும் அமெரிக்கா ஏற்படுத்தி தரவில்லை என ராணுவ மேஜர் ஸ்டீபன் ராம்ஸ்பாட்டம் குற்றம்சாட்டியுள்ளார்.

ஈரானில் ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க வலியுறுத்தி ‘ஆபரேஷன் எபிக் ஃபியூரி’ என்ற ராணுவ நடவடிக்கையை கடந்த மார்ச் 1 அன்று அமெரிக்கா நடத்தியது.

ஈரான் துறைமுகம் ஷூவைபாவில் நடத்தப்பட்ட ராணுவ தாக்குதலில் ஆளில்லா ட்ரோன்கள் மூலம் இரு தரப்பினரும் தாக்குதல்கள் நடத்தின.

இந்த தாக்குதலில் 6 அமெரிக்க படை வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் ஈரான் நடத்திய தாக்குதலில் அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு தேவையான மருத்துவ அவசர சேவைகள் ஏற்பாடு செய்து தரப்படவில்லை என உயிர் தப்பிய மேஜர் ஸ்டீபன் தெரிவித்துள்ளார்.

ராணுவ பிரிவின் 103வது கமாண்ட் துணை தலைவராக மேஜர் ஸ்டீபன் பணியாற்றி வந்தார். இவர் அமெரிக்க பிரதிநிதிகள் சபை மற்றும் செனட்டின் ஆயுத சேவைகள் குழுக்களிடம் புகார் ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள புகாரில், அமெரிக்காவின் ராணுவ வளாகம், தரைவழி அச்சுறுத்தல்களை தடுக்கும் வகையில் தான் அமைக்கப்பட்டிருந்தது;

வான்வழி தாக்குதல்களில் இருந்து தற்காத்து கொள்ள தேவையான உள்கட்டமைப்பு அதில் இல்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் ஷூவைபா துறைமுகத்தில், ட்ரோன் விமான எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்பை தங்கள் ராணுவ வீரர்கள் கோரியதாகவும், ஆனால் பென்டகன் அதனை வழங்கவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டினார்.

அந்த இடத்தில் மருத்துவர், நிரந்தர முதலுதவி நிலையம் ஆகியவை இல்லாமல் இருந்ததாகவும், ஒரே ஒரு ஆம்புலன்ஸ் சேவை மட்டுமே இருந்ததாகவும் அவர் கூறினார்.

இந்த நிலையில் அமெரிக்க ராணுவ மேஜர் அளித்துள்ள புகாருக்கு, அமெரிக்க போர் செயலர் பீட் ஹெக்ஸெத் மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஒரு ஆளில்லா விமானம், ராணுவ வளாகத்தை ஊடுருவி சென்றதாகவும், அந்த நிகழ்வின்போது ஆறு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் அவர் கூறினார்.

SCROLL FOR NEXT