இந்தோனேசியாவின் பப்புவா மாகாணத்தில் கிளர்ச்சியாளர்கள், சிறிய ரக பயணிகள் விமானத்தை தீக்கிரையாக்கி அதனை ஓட்டி வந்த அமெரிக்க விமானியை சுட்டுக்கொன்றுள்ளனர்.
இயற்கை வளங்கள் நிறைந்த பப்புவா மாகாணத்தின் மேற்குப் பகுதியை இந்தோனேசியாவிலிருந்து பிரித்துத் தனி நாடாக்க அங்குள்ள சில குழுக்கள் நீண்ட காலமாகத் கொரில்லாப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.
இதில் 'மேற்கு பப்புவா தேசிய விடுதலை ராணுவம்' என்ற பிரிவினைவாத குழு தற்போதைய தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.
பப்புவாவின் யாஹுகிமோ பிராந்தியத்தில் உள்ள பலிங்காமா மாவட்டத்தில் விமானம் தரையிறங்கிய உடனேயே தங்கள் போராளிகள் அமெரிக்கப் விமானியாக நிகோலஸ் கோஸெலின் என்பவரைச் சுட்டுக் கொன்றதாக அக்குழுவில் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
பப்புவாவில் போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களுக்குள், இந்தோனேசிய அரசு பயணிகள் விமானங்களை அனுமதிக்கக் கூடாது என்று அக்குழு எச்சரித்துள்ளது.
யாஹுகிமோவில் உள்ள உள்ளூர் விமான நிலையத்தில் அமெரிக்கப் விமானியின் உடலும், எரிந்து சாம்பலான ஒரு சிறிய பயணிகள் விமானமும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக இந்தோனேசியப் பாதுகாப்புப் படையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
விபத்துக்குள்ளான அந்தச் சிறிய விமானத்தில் அமெரிக்கப் விமானியுடன் சேர்த்து 7 பயணிகள் பயணித்துள்ளனர்.
அதிர்ஷ்டவசமாக அவர்கள் அனைவரும் பப்புவா பிராந்தியத்தைச் சேர்ந்த உள்ளூர் மக்கள் என்பதால், போராளிகள் அவர்களை விட்டுவிட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.