இந்தோநேசியாவில் மோடி  
உலகம்

பிரதமர் மோடிக்கு இந்தோனேசியாவின் உயரிய விருது அறிவிப்பு!

இந்த ஆண்டு இந்தியாவின் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக அதிபர் பிரபோவோ பங்கேற்றார்.

பிரதமர் மோடிக்கு இந்தோனேசிய அரசு தங்கள் நாட்டின் உயரிய விருதை வழங்கி கௌரவிக்க உள்ளது.

சுற்றுப்-பயணம்

மூன்று நாடுகள் சுற்றுப்பயணத்தின் முதல் கட்டமாக பிரதமர் மோடி நேற்று இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தா சென்றடைந்தார்.

பிரதமர் மோடி பயணித்த சிறப்பு விமானம் இந்தோனேசிய வான்வெளியில் நுழைந்த உடனேயே, அந்த நாட்டின் விமானப்படையைச் சேர்ந்த அதிநவீன போர் விமானங்கள் பாதுகாப்பு அரணாகப் பறந்து விமான நிலையம் வரை அழைத்து வந்தன.

இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ நேரடியாக விமான நிலையத்திற்கே வந்து உற்சாக வரவேற்பு அளித்ததார்.

இந்தோனேசிய அரசின் Protocol-படி வெளிநாட்டு தலைவர்களை வரவேற்க அதிபர் வரவேண்டியதில்லை. ஆனால் பிரதமர் மோடிக்காக மரபை மீதி அதிபரே நேரில் வந்து வரவேற்றது கவனம் பெற்றது.

வர்த்தகம், ராணுவப் பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு, தொழில் முதலீடுகள் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இரு நாடுகளின் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து அந்நாட்டு அதிபருடன் அவர் விவாதிக்க உள்ளார்.

மேலும், இந்தோனேசியாவில் வாழும் இந்திய வம்சாவளியினரை நேரில் சந்தித்துப் பிரதமர் உரையாடவுள்ளார்.

இந்த ஆண்டு இந்தியாவின் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக அதிபர் பிரபோவோ பங்கேற்றதன் தொடர்ச்சியாகவே இந்தச் சந்திப்பு அமைந்துள்ளது என முன்னதாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

விருது

இந்தோனேசியாவின் உயரிய விருதான 'பிந்தாங் அடிபூர்ணா ஆஃப் தி ரிபப்ளிக் ஆஃப் இந்தோனேசியா' பதக்கத்தை அவருக்கு வழங்குவதாக அதிபர் பிரபோவோ சுபியாண்டோ இன்று அறிவித்துள்ளார்.

இந்த விருந்தானது இந்தோனேசியாவின் ஒற்றுமை, தொடர்ச்சி மற்றும் செழிப்புக்கு பங்காற்றிய தனி நபர்களுக்கு வழங்கப்படும் ஒன்றாகும்.

இந்தோனேசியப் பயணத்தை முடித்து பின்னர், பிரதமர் மோடி அங்கிருந்து நேரடியாக ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.