உலகம்

மங்கோலியாவின் ஆங்கில மொழித்திறனை வளர்க்க இந்தியா உதவும் - உறுதியளித்த ஜெய்சங்கர்

மங்கோலியா அரசு இதற்கான அதிகாரப்பூர்வ கோரிக்கையை முன்வைத்துள்ளது.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், மங்கோலியாவில் ஆங்கில மொழித்திறனை மேம்படுத்த இந்தியா முழுமையாக உதவும் என்று அந்நாட்டிற்கு உறுதியளித்துள்ளார்.

இரண்டுநாள் அரசுமுறைப் பயணமாக மங்கோலியா சென்றுள்ள அமைச்சர் ஜெய்சங்கர் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை அடுத்து, மங்கோலியா அரசு கேட்டுக் கொண்டதின்பேரில் இந்த உறுதியை வழங்கியுள்ளார்.  

இருநாடுகளின் கலந்துரையாடலில் வளர்ச்சித் திட்டங்கள், திறன் மேம்பாடு, கலாச்சாரம், கல்வி, பாதுகாப்பு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டன.

மங்கோலிய பயணம் தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர்,

“மூன்றாவது அண்டை நாடாகவும், ஆன்மீகப் பங்காளராகவும், மங்கோலியாவுடனான தனது நெருக்கமான மற்றும் சுமுகமான உறவுகளை மேலும் வலுப்படுத்த இந்தியா தயாராக உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று மங்கோலியா சென்றநிலையில், அடுத்தகட்டமாக நாளை தென்கொரியா செல்கிறார். அங்கு ஜெஜு அமைதி மற்றும் செழிப்பு மன்றத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற இருக்கிறார்.

SCROLL FOR NEXT