உலகம்

பக்லிஹார் அணையை மூடி ஓராண்டு நிறைவு.. பாகிஸ்தான் விவசாயம், மின்சார உற்பத்தி கடும் பாதிப்பு

பாகிஸ்தானுக்கு செல்லும் நீரின் அளவு 90 சதவீதம் வரை குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

2025 ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் உடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது.

இதன் இரு பகுதியாக ஜம்மு காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் செனாப் நதியின் மீதான பக்லிஹார் அணையின் கதவுகளை மூடி ஓராண்டு கடந்துள்ளது.

இதன் மூலம் செனாப் நதியிலிருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் நீரின் அளவு 90 சதவீதம் வரை குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

தனது விவசாய நிலங்களில் 80 சதவீதத்திற்கு சிந்து நதியையே நம்பியிருக்கும் பாகிஸ்தான், காரிப் பயிர் பருவத்தில் 21 சதவீதம் வரையிலான தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்து வருகிறது.

இது கோதுமை மற்றும் அரிசி உற்பத்தியைக் கடுமையாகப் பாதித்துள்ளது. மேலும் அணை மூடலால் நீர்மின் நிலையங்களின் செயலிழப்பும் பாகிஸ்தானின் எரிசக்தி நெருக்கடியை மேலும் மோசமாக்கியுள்ளது.

பாகிஸ்தான், இந்தியாவின் இந்த நடவடிக்கையை நீர் பயங்கரவாதம் என்று வர்ணித்தபோதிலும், உலக வங்கியிடமிருந்து சாதகமான தலையீடுகள் இல்லாதது அவர்களை மேலும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

SCROLL FOR NEXT