உலகம்

2026 உலகளாவிய பசி குறியீட்டில் 122 நாடுகளில் 100-வது இடத்தில் இந்தியா

ஜெர்மனியின் 'வெல்ட்ஹங்கர்ஹில்ப்' மற்றும் அயர்லாந்தின் 'கன்சர்ன் வேர்ல்ட்வைட்ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளன.

2026 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய பசி குறியீட்டில் மொத்தமுள்ள 122 நாடுகளில் இந்தியா 100 வது இடத்தை பெற்றுள்ளது.ஜெர்மனியின் 'வெல்ட்ஹங்கர்ஹில்ப்' (Welthungerhilfe) மற்றும் அயர்லாந்தின் 'கன்சர்ன் வேர்ல்ட்வைட்' (Concern Worldwide) ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளன

இந்தியா இந்த குறியீட்டில் 24.1 மதிப்பெண்களைப் பெற்று, பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு தீவிரமாக (Serious Category) உள்ள நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து நீடித்து உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

ஜெர்மானிய உதவி நிறுவனமான வெல்தங்கர்ஹில்ஃப் (WHH) , அயர்லாந்து அமைப்பான கன்சர்ன் வேர்ல்டுவைட், மற்றும் கூட்டாளர் நிறுவனங்களான சர்வதேச அமைதி மற்றும் ஆயுத மோதல் சட்ட நிறுவனம் (IFHV) மற்றும் சுவிஸ் அமைப்பான ஹெல்வெடாஸ் ஆகியவற்றால் கூட்டாக இந்த அறிக்கையானது வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின் படி இந்தியா 24.1என்ற புள்ளியுடன் தொடர்ந்து கடுமையான தரவரிசையில் நீடித்து வருகிறது.2012 ஆம் ஆண்டிலிருந்து இந்த புள்ளியில் இருந்து இந்தியாவால் இன்னும் வெளியேற முடியவில்லை.

இந்தக் குறியீட்டின்படி, மக்கள்தொகையில் 9.8% பேர் ஊட்டச்சத்துக் குறைபாட்டுடன் உள்ளனர் மற்றும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 29.3% பேர் வளர்ச்சி குன்றியவர்களாக உள்ளனர். இது முதல் முறையாகப் பதிவான மிக அதிக விகிதமாகும். இந்தியாவில், குழந்தைகளிடையே ஏற்படும் மெலிவு நோய் விகிதம் முந்தைய ஒப்பீட்டுக் காலத்தில் 16.9% ஆக இருந்த நிலையில், தற்போது 19% ஆக உயர்ந்துள்ளது. இது தெற்காசியாவிலேயே மிக உயர்ந்த விகிதமாகும்.

மந்தமாகியுள்ள இந்தியாவின் முன்னேற்றம்

பசியைக் குறைப்பதில் இந்தியாவின் முன்னேற்றம் மந்தமாகியுள்ளது. ஏனெனில் 2018 மற்றும் 2026-க்கு இடையில் அதன் மதிப்பெண் 25.8-லிருந்து 1.7 புள்ளிகள் குறைந்துள்ளது. இது 2006 மற்றும் 2012-க்கு இடையில் ஏற்பட்ட 8.2-புள்ளி முன்னேற்றத்தை விட மிகவும் குறைவானதாகும். தெற்காசியாவின் மதிப்பெண் 23.5 ஆக உள்ளது, மேலும் அதன் 15.8% குழந்தை ஊட்டச்சத்துக் குறைபாடு விகிதம் இந்தியாவை ஒப்பிடுகையில் உயர்ந்தேயாகும்

தெற்காசியாவில் இலங்ககை (53), நேபாளம் (72), வங்கதேசம் (84) ஆகிய நாடுகள் இந்தியாவை விட சிறந்த நிலையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. அதேசமயம் பாகிஸ்தான் 106-வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 108-வது இடத்திலும் இந்தியாவுக்குப் பின்னால் உள்ளன.

உலகளவில் பசியைக் கண்காணிக்கவும் அளவிடப்பட்ட கருவியின் அடிப்படையில் பசியின் பரிமாணத்தை பல்வேறு பரிமாணங்களை பிரதிபலித்துள்ளது. இந்த மதிப்பெண் நான்கு அள்வீட்டில் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது

ஊட்டச்சத்துக் குறைபாடு (போதுமான கலோரி உட்கொள்ளல் இல்லாத மக்கள்தொகையின் பங்கு), குழந்தைகளின் வளர்ச்சி குன்றல் அதாவது நாள்பட்ட ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் பிரதிபலிக்கும் வகையில், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் தங்கள் வயதுக்கு ஏற்ற உயரம் குறைவாக உள்ளவர்களின் பங்கு, குழந்தைகளின் மெலிவு (கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் பிரதிபலிக்கும் வகையில்,

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் தங்கள் உயரத்திற்கு ஏற்ற எடை குறைவாக உள்ளவர்களின் பங்கு), குழந்தை இறப்பு (போதுமான ஊட்டச்சத்து இல்லாமை மற்றும் ஆரோக்கியமற்ற சூழல்களின் அபாயகரமான கலவையை ஓரளவு பிரதிபலிக்கும் வகையில், ஐந்தாவது பிறந்தநாளுக்கு முன்பே இறக்கும் குழந்தைகளின் பங்கு).

ஆகியவற்றின் அடிப்படையில் வெவ்வேறு ஆண்டுகளின் அறிக்கைகளில் உள்ள GHI மதிப்பெண்களை ஒப்பிட இயலாது என்பதற்கான காரணத்தால் காலப்போக்கில் ஒப்பீடுகளை மேற்கொள்வதற்காக, இந்த ஆண்டின் அறிக்கை 2000, 2006, 2012 மற்றும் 2018 ஆகிய நான்கு ஆண்டுகளை ஒப்பீட்டு ஆண்டுகளாகக் கொண்டு அறிக்கையானது வெளியிடப்பட்டுள்ளது, அவை அனைத்தும் திருத்தப்பட்ட வழிமுறையையும் தரவுகளின் சமீபத்திய திருத்தங்களையும் உள்ளடக்கியதாகவே உள்ளன.

ஆயுத மோதல் முக்கிய காரணி

குறிப்பாக ஆயுத மோதல்கள் பசியின் முக்கிய காரணிகளில் முக்கியமான ஒன்றாகும். இரண்டாம் உலகப்போருக்கு பிற்கு அரசுகளுக்கிடையே ஏற்ப்பட்ட மோதல்களுக்கு பிறகு பசியினமி உச்சத்தை எட்டியுள்ளதாக இந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் மற்றும் ஈரானுக்கு எதிரான போர் காரணமாக உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது, இது உலகளாவிய வர்த்தகத்தை வெகுவாகப் பாதித்துள்ளது. மக்கள் மலிவான மற்றும் ஊட்டச்சத்து குறைந்த உணவுகளை நாடவோ அல்லது உணவைத் தவிர்க்கவோ முனையலாம், இது ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கு வழிவகுக்கும்.

இதற்கிடையில், காலநிலை மாற்றம் தொடர்பான தீவிர வானிலை நிகழ்வுகள் மற்றும் பயிர்ச் சேதங்கள் உணவுப் பாதுகாப்பின்மையை அதே நேரத்தில் ஒன்றோடொன்று தொடர்புடைய நெருக்கடிகள் உணவு அமைப்புகளின் மீள்திறனை பலவீனப்படுத்துள்ளதாக அறிக்கை குறிப்பிட்டுள்ளது

SCROLL FOR NEXT