உலகம்

ரஷ்ய எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அனுமதியை நீட்டிப்பது குறித்து டிரம்ப் தான் முடிவெடுப்பார் - ரூபியோ

மீண்டும் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்க முடியும்.

ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்காக இந்தியாவுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை இனி நீட்டிக்கப் போவதில்லை என டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு கடந்த வாரம் திட்டவட்டமாக தெரிவித்திருந்தது.

இருப்பினும் சந்தையின் தற்போதைய நிலையை மதிப்பிட்ட பின்னரே, சலுகைகளை நீட்டிப்பதா அல்லது முடிவுக்குக் கொண்டுவருவதா என்பதை டிரம்ப் முடிவு செய்வார் என ஹ்ரைன் பயணத்தின்போது அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

ஈரான் போர் நிறுத்தம், ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு காரணமாக கச்சா எண்ணெய் விலை சரிந்து வருவதால், மீண்டும் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்க முடியும் என ரூபியோ தெரிவித்துள்ளார்.

கெப்லர் கண்காணிப்பகத்தின்படி, ஜூன் மாதத்தில் இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி சாதனை அளவை எட்டியது. சராசரியாக, ஒரு நாளைக்கு 2.6 மில்லியன் பீப்பாய் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் ரஷிய எண்ணெய் வாங்க தடை விதிக்கப்பட்டால் சர்வதேச பதற்றம் தணிந்த பிற்பாடும் இந்தியாவுக்கு பாதிப்பு இருக்கும் என கணிக்கப்படுகிறது.