தகாத உறவுகள் சர்ச்சையில் சிக்கிய என்விடியா சிஇஓ ஜென்சன் ஹுவாங்குக்கு எலான் மஸ்க் வேலை வழங்க முன்வந்துள்ளார்.
அமெரிக்காவின் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமான என்விடியா வின் நிர்வாக இயக்குநர் ஜென்சன் ஹூவாங் (வயது 63), சீன உளவாளி என்று சந்தேகிக்கப்படும் ஆலிஸ் ஹூவாங் என்ற பெண்ணு டன் ரகசிய தொடர்பு இருப்பதை ஒப்புக்கொண்டார்.
தனது மனைவியிடம் அவர் மன்னிப்பு கேட்டார். இவ்விவகாரம் அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
ஜென்சன் ஹுவாங்குடனான ரகசிய உறவை பயன்படுத்தி ஆலிஸ் சீனா வுக்கு 2.40 லட்சம் செயற்கை நுண்ணறிவு சிப்களை சட்ட விரோதமாக அனுப்பியதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இது தொடர்பாக அமெரிக்க புலனாய்வு அமைப் பான எப்.பி.ஐ விசாரணை நடத்தி வருகிறது. மேலும் என்விடியா இயக்குநர்கள் குழு விரிவான விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் ஜென்சன் ஹூவாங் மீது 2-வது தகாத தொடர்பு குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இது தொடர்பாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டு உள்ளது.
அதில் என்விடியா நிறுவனத்தின சுகாதாரப் பிரிவு துணைத் தலைவர் கிம்பெர்லி பௌவலுடன் ஜென்சன் ஹூவாங்குக்கு திருமணத்தை மீறிய உறவு இருந்தது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த மார்ச் மாதம் கலிபோர்னியாவில் நடந்த என்விடியா நிறுவன மாநாட்டின் போது ஜென்சன் ஹுவாங்கும் கிம்பெர்லியும் ஒரு ஓட்டலில் தகாதவாறு நடந்துகொண்டதை பார்த்ததாக அந்நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்கள் 2 பேர் தெரிவித்தனர்.
தலைமை அதிகாரி ஜென்சன் ஹூவாங் மீதான சர்ச்சையால் என்விடியா நிறுவனத்தின் பங்குகள் சுமார் 10 சதவீதம் சரிவை சந்தித்தன.
இதற்கிடையே ஜென்சன் ஹூவாங்கை பதவியில் இருந்து நீக்க அந்நிறுவனம் தயாராகி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
நிறுவனத்தில் ஜென்சன் ஹுவாங்கின் எதிர்காலம் குறித்து முடிவெடுக்க என்விடியா நிறுவன இயக்குனர்கள் குழு கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
தலைமைச் செயல் அதிகாரி பதவிக்கு ஜென்சன் ஹுவாங்கிற்குப் பதிலாக ஒருவரை அடையாளம் காண என்விடியா நிறுவனம் மற்றொரு நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
அதுவரை தற்காலிக தலைமை அதிகாரியை நியமிக்க முடிவு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தகாத உறவு சர்ச்சையில் சிக்கி உள்ள ஜென்சனை தனது நிறுவனத்தில் இணைய ஸ்பேஸ்எக்ஸ், டெஸ்லா உள்ளிட்ட பல நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க் அழைப்பு விடுத்து உள்ளார்.
ஜென்சன் ஹுவாங்கை "உங்களது நிறுவனத்தில் பணியமர்த்துமாறு" ஒரு பயனர் எக்ஸ் வலைதளத்தில் எலான் மஸ்கிடம் வலியுறுத்தினார்.
அதற்கு பதிலளித்த எலான் மஸ்க் அது ஒரு கவுரவமாக இருக்கும் என்று பதிவிட்டார்.