அடுத்த உறவு அம்பலம்?.. என்விடியா ஹெல்த்கேர் துணை தலைவருடன் தகாத உறவு - ஓட்டல் அறை வீடியோவால் சிக்கிய ஜென்சன்?

ஆலிஸ் ஒரு சீன உளவாளி என்பதை அமெரிக்க உளவுத்துறை கண்டுபிடித்ததும் இன்னும் சர்ச்சைக்குரியதாக மாறியிருக்கிறது.
ஜென்சன், கிம்பெர்லி
Published on: 
Summary

என்விடியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜென்சென் ஹுவாங்க் 2வது தகாத உறவு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

என்விடியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜென்சென் ஹுவாங்க் பாலியல் புகாரில் சிக்கிய நிலையில் அவர் தன் வேலையை இழக்கும் சூழலில் உள்ளார்.

ஆலிஸ் ஹுவாங் என்ற சீன பெண் ஒருவருடன் அவருக்கு தொடர்பு இருப்பதாக முன்னதாக தகவல் வெளியானது.

ஆலிஸ் ஒரு சீன உளவாளி என்பதை அமெரிக்க உளவுத்துறை கண்டுபிடித்ததும் இன்னும் சர்ச்சைக்குரியதாக மாறியிருக்கிறது.

இதன் மத்தியில் என்விடியா நிறுவனத்தின் ஹெல்த்கேர் பிரிவு துணைத் தலைவர் (வைஸ் பிரசிடென்ட்) கிம்பெர்லி பொளவல் உடனும் அவர் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக தகவல் வெளியாகயுள்ளது.

இருவருமே வெவ்வேறு நபர்களுடன் திருமணமானவர்கள் ஆவர். 'நியூயார்க் டைம்ஸ்' இதுகுறித்து கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் கலிபோர்னியாவின் சான் ஹோசேவில் உள்ள ஒரு ஹோட்டலில் அவர்கள் இருவரும் உடலுறவு கொள்வதை யாரோ ஒருவர் படம்பிடித்ததாக அந்த கட்டுரை கூறுகிறது.

யார் இந்த கிம்பெர்லி?

48 வயதான கிம்பெர்லி, 2008 இல் என்விடியா நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். தற்போது அவர் அந்நிறுவனத்தின் வெளிநாட்டு ஹெல்த்கேர் தொழிலை கவனித்து வருகிறார்.

மெடிக்கல் இமேஜிங்க், லைப் சைன்ஸச், மருந்து கண்டுபிடிப்பு மற்றும் ஹெல்த்கேர் அனாலிட்டிக்ஸ் ஆகியவற்றுக்கு உதவும் வகையில் அக்சலரேட்டட் கம்ப்யூட்டிங், ஏஐ, விஷுவலைஷெசன் உள்ளிட்டவற்றுக்கு நிறுவனத்தின் ஹார்ட்வேர், சாப்ட்வேர் பிளாட்பார்ம்களை பயன்படுத்தும் பணிகளை அவர் மேற்பார்வையிட்டு வருகிறார்.

1993ல் நிறுவனம் நிறுவப்பட்டதிலிருந்து ஜான்சென் ஹுவாங் அதன் ஒரே தலைமைச் செயல் அதிகாரியாக இருந்து வருகிறார். கிம்பெர்லி, ஜென்சன் ஹுவாங்குடன் 18 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றியுள்ளார்.

சுகாதாரத் துறையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்த விரும்பும் ஆராய்ச்சியாளர்களுக்கு உதவ வேண்டும் என்ற ஹுவாங்கின் பேரார்வத்தாலும் விருப்பத்தாலும் தான் ஈர்க்கப்பட்டதாக பவல் முன்பு நேர்காணல்களில் கிம்பெர்லி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

வீடியோ

கடந்த மார்ச் மாதம் கலிபோர்னியாவின் சான் ஹோசேவில் நடைபெற்ற என்விடியாவின் வருடாந்திர டெவலப்பர் மாநாட்டின் போது, ​​ஒரு ஹோட்டலில் ஹுவாங்கும் கிம்பெர்லியும் உடலுறவு கொள்வது படமாக்கப்பட்டதாக கூறும் நியூயார்க் டைம்ஸ், அதற்கு ஆதாரமாக என்விடியாவின் ஐந்து முன்னாள் ஊழியர்களை மேற்கோள் காட்டி உள்ளது.

ஹுவாங்கின் பாதுகாப்புக் குழு, வீடியோவைப் படம்பிடித்த நபரை அங்கிருந்து அப்புறப்படுத்தியதாகவும், பின்னர் இந்த ரகசியத்தை வெளியிடாமல் இருக்க அவருக்கு பணம் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

என்விடியாவின் செயற்கை நுண்ணறிவு சிப் தரவுகள் சீனாவுக்குக் கசிந்துவிட்டதாக அமெரிக்க உளவு நிறுவனங்கள் சந்தேகிக்கும் வேளையில் இந்த இரண்டாவது உறவு குறித்த தகவல்கள் வந்துள்ளன.

ஹுவாங்கை பதவியிலிருந்து நீக்கும் பணியில் என்விடியாவின் இயக்குநர் குழு மும்முரமாக ஈடுபட்டுள்ளது

சர்ச்சைகளுக்கு மத்தியில் என்டிடியா நிறுவன பங்குகளின் விலை கிட்டத்தட்ட 8 சதவீதம் சரிந்து, ஒரே வாரத்தில் அதன் மதிப்பில் 600 பில்லியன் டாலருக்கும் அதிகமாக இழப்பு ஏற்பட்டுள்ளது.

X