டிரம்ப்  
உலகம்

மீண்டும் முழுமையான போரை தொடங்கினால் ஈரான் என்ற நாடே இருக்காது - டிரம்ப் இறுதி வார்னிங்

பேச்சுவார்த்தையில் இருந்து நிரந்தரமாக வெளியேற வேண்டியிருக்கும் என ஈரான் எச்சரித்தது.

கடந்த வாரம் எடிட்டப்பட்ட ஈரான் - அமெரிக்கா புரிந்துணர்வு சீர்குலைந்து ஒரே வாரத்தில் மீண்டும் மோதல் வெடித்துள்ளது.

தாக்குதல்

வணிக கப்பல் ஒன்றை ஈரான் தாக்கியதாக கூறி அமெரிக்கா அந்நாட்டு ராணுவ உள்கட்டமைப்பு மீது தாக்குதல் நடத்தியது. பதிலடியாக பஹ்ரைன், குவைத் அமெரிக்க தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியது.

மீண்டும் ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் அதனை சுற்றியுள்ள ஈரானின் ராணுவ உள்கட்டமைப்பை அமெரிக்கா குறிவைத்தது.

ஈரானின் ஏவுகணை மற்றும் டிரோன் சேமிப்புக் கிடங்குகள், மற்றும் அவர்களின் கடலோர ரேடார் தளங்கள் மீது அமெரிக்கப் போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்தன.

அதேநேரம் பஹ்ரைன் மீதான தாக்குதலை ஈரான் தொடர்ந்து வருகிறது. பஹ்ரைனில் அமெரிக்க விமான படைத்தளம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா மீண்டும் தாக்கினால் ஸ்விட்சர்லாந்தில் நிரந்தர போர் நிறுத்தம் எட்டுவதற்காக நடந்து பேச்சுவார்த்தையில் இருந்து நிரந்தரமாக வெளியேற வேண்டியிருக்கும் என ஈரான் எச்சரித்தது.

இந்த சூழலில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரானுக்கு கடும் மிரட்டல் ஒன்றை விடுத்துள்ளார்.

மிரட்டல்

டிரம்ப் தனது சமூக வலைதள பதிவில், "போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீண்டும் மீண்டும் மீறுவதன் மூலம் அவர்கள் (ஈரான்) எப்போதுமே பாடம் கற்றுக்கொள்ளப் போவதில்லை என்பதுதான் கசப்பான உண்மை.

ஒருவேளை, நாங்கள் இனிமேலும் நியாயமான முறையில் நடந்துகொள்ள முடியாத ஒரு சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு, மீண்டும் ஒரு முழுமையான போரைத் தொடங்க அமெரிக்கா கட்டாயப்படுத்தப்பட்டால்... அதன் பிறகு 'இஸ்லாமியக் குடியரசான ஈரான்' என்ற ஒரு நாடு இந்த உலகத்தில் இனிமேல் அ அங்கிருக்காது" என குறிப்பிட்டுள்ளார்.