ஈரான் மீது மீண்டும் தக்குதல் நடத்தினால் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முடிவுக்கான நேரம் நிர்ணயம் செய்யப்படும் என ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் நிறுத்த பேச்சுவார்த்தை சில மாதங்களாக நடைபெற்று வரும் சூழலில், தாக்குதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கு இரு நாடுகளும் சில நிபந்தனைகளை விதித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஈரானுடனான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அமெரிக்கா தற்போது இரண்டு நிபந்தனைகளை விதித்துள்ளது.
அதில் ஈரான் கையிறுப்பில் வைத்துள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை மூன்றாவது நாட்டிற்கு மாற்ற வேண்டும் என்றும்; அல்லது ஈரான் தனது கைவசம் வைத்துள்ள யுரேனியத்தின் அளவை குறைக்க வேண்டும் என்றும் அமெரிக்கா நிபந்தனை விதித்துள்ளது.
மேலும் ஹார்முஸ் ஜலசந்தியில் வர்த்தக கப்பல் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் எனவும் அமெரிக்கா ஈரானுக்கு நிபந்தை விதித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தலின் பேரில், துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் முன்மொழிந்த நிபந்தனை கடிதத்தை, ஈரான் பாதுகாப்பு அதிகாரி மொஹ்சென் ரெசாயிடம், கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜஸ்ஸிம் அல் தானி நேற்று வழங்கினார்.
இந்த இரண்டு நிபந்தனைகளையும் ஈரான் ஏழு நாட்களுக்குள் நிறைவேற்ற வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் அமெரிக்கா குறிப்பிட்டிருந்தது.
இந்த நிலையில் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வேன்ஸிடம் இருந்து வந்த கடிதத்தில் அமெரிக்கா தனது நிலைப்பாட்டை முற்றிலும் மாற்றியுள்ளதாக ஈரான் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரி மொஹ்சென் ரெஸாயி தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து ரெஸாய் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “அமெரிக்காவின் தொனி முற்றிலும் மாறியுள்ளது. இது நமது மக்கள் தங்களது வெற்றியை உறுதி செய்துவிட்டனர் என்பதை காட்டும் ஒரு நல்ல அறிகுறியாகும்” என கூறினார்.
இதைத்தொடர்ந்து அமெரிக்கா அல்லது இஸ்ரேல் மேற்கொள்ளும் எந்தவொரு ராணுவ நடவடிக்கைக்கும் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் எதிரி நாடுகள் மீண்டும் ராணுவ அல்லது பயங்கரவாத தாக்குதல் நடத்தினால், இஸ்லாமிய குடியரசின் ஆயுத படைகளும் ஈரான் ராணுவமும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் முடிவுக்கான நேரத்தையும் நிபந்தனையையும் நிர்ணயிக்கும் என காமேனி கூறினார்.