பீட் ஹெக்சேத்
உலகம்

பதவி நீக்க நடவடிக்கை தீர்மானம்: தப்பினார் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர்

ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பதவி நீக்க நடவடிக்கை.

அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்சேத்தை (Pete Hegseth) பதவி நீக்கம் செய்யக் கோரிய முயற்சியை அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் குடியரசுக் கட்சியினர் முறியடித்துள்ளனர்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசில் பாதுகாப்பு செயலராக பதவி வகிக்கும் பீட் ஹெக்சேத் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக, ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைகள், பொதுமக்கள் உயிரிழப்புகள், ராணுவ அதிகாரத்தைப் பயன்படுத்திய விதம் உள்ளிட்ட விவகாரங்கள் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகின. மேலும், ஈரான் போரினால் அமெரிக்காவில் எண்ணெய் விலை உயர்ந்ததாகவும் குற்றச்சாட்டப்பட்டது.

பதவி நீக்க தீர்மானம்

குடியரசுக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் தாமஸ் மாஸ்ஸி, பீட் ஹெக்சேத்தை பதவி நீக்கம் செய்யக் கோரி தீர்மானம் கொண்டு வந்தார். இதில் எட்டு முக்கியக் குற்றச்சாட்டு பிரிவுகள் இடம்பெற்றிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்தத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் 211 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 204 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். இதன் மூலம் பதவி நீக்க நடவடிக்கை தற்போதைக்கு முடக்கப்பட்டது. குடியரசுக் கட்சியைச் சேர்ந்த பெரும்பாலான உறுப்பினர்கள் பீட் ஹெக்சேத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இந்த முயற்சியை பீட் ஹெக்சேத் அரசியல் உள்நோக்கம் கொண்ட நடவடிக்கை என விமர்சித்தார். அதிபர் டொனால்ட் டிரம்பும் அவருக்கு ஆதரவு தெரிவித்தார்.

ஜனவரி மாதம் சிக்கல்

எனினும், இந்த விவகாரம் அமெரிக்க அரசியலில் தொடர்ந்து விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. வரும் ஜனவரி மாதம் ஜனநாயகக் கட்சியினர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பொறுப்பேற்க உள்ளதால், பீட் ஹெக்சேத் மீதான நடவடிக்கையை மீண்டும் முன்னெடுக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT