இடைத்தேர்தலுக்கு பின்பு ஈரான் மீது தாக்குதலை தொடங்கிய அமெரிக்கா - சிறிய தாக்குதல் என டிரம்ப் பேட்டி

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கிடையே ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பாக பல மாதங்களாக தாக்குதல் நடந்து வருகிறது.
Trump describes recent military action as minor strike amid rising tensions with Iran.
Published on: 
Summary

அமெரிக்க இடைத்தேர்தலை தொடர்ந்து ஈரான் மீது தனது முதல்கட்ட தாக்குதலை அமெரிக்கா நடத்தியுள்ள நிலையில், இந்த சமீபத்திய ராணுவ நடவடிக்கையை மிகச்சிறிய அளவிலான தாக்குதல் என அதிபர் டொனாட்ல் டிரம்ப் விவரித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கிடையே ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பாக பல மாதங்களாக தாக்குதல் நடந்து வருகிறது.

இந்த தாக்குதலில் அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒத்துழைக்காமல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக ஈரான் குற்றம்சாட்டி வருகிறது.

அமெரிக்காவில் சமீபத்தில் நடந்து முடிந்துள்ள இடைத்தேர்தலில் டிரம்ப் தலைமயிலான குடியரசு கட்சி படுதோல்வியை சந்தித்து செனட் சபையின் பிரதிநிதிகளையும் இழந்தது.

ஈரான் மீது தேவையில்லாமல் தாக்குதல் நடத்தி வருவதால், அமெரிக்காவில் இறக்குமதியில் சிக்கல் ஏற்பட்டு அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து காணப்படுகிறது.

இதன் காரணமாக டிரம்ப் நிர்வாகத்தின் மீது அதிருப்தி, இடைத்தேர்தல் முடிவுகளில் எதிரொலித்ததாக செய்தி வெளியாகின.

இந்த நிலையில் ஈரான் வர்த்தக போக்குவரத்து வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியில் அமைந்துள்ள கெஷ்ம் தீவின் சூசா பகுதியில் அமெரிக்கா தாக்குதலை நேற்று நடத்தியுள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்கா நடத்திய தாக்குதலை, ஈரான் செய்தி ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

இந்த நிலையில் ஈரான் மீதான தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுகையில், “அவர்கள் ஒரு சிறிய விமான எதிர்ப்பு சாதனத்தை உருவாக்கினார்கள்.

அதற்கு 15 நிமிடங்கள் தேவைப்பட்ட நிலையில், அதனை நாங்கள் சுமார் 5 நிமிடத்தில் செயலிழக்க செய்தோம்” என்று கூறினார்.

இதையடுத்து ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து பேசிய டிரம்ப், அமெரிக்காவின் ஒப்புதல் இல்லாமல் ஈரான் முன்னேற முடியாது என திட்டவட்டமாக கூறினார்.

இதுகுறித்து அமெரிக்கா கூறுகையில், இது ஒடு தற்காப்பு நடவடிக்கை தான் என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும் ஹார்முஸ் ஜலசந்தியில் வணிக கப்பல்கள் சுதந்திரமாக செல்வதை தடுக்கும் ஈரானின் முயற்சிகளை முறியடிக்கவே, இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

X