ஹார்முஸ்  
உலகம்

Route Clear: ஹார்முஸ் ஜலசந்தியை பத்திரமாக கடந்து 30 கப்பல்கள் இந்தியா நோக்கி பயணம்

மேலும் 26 கப்பல்கள் பயண அனுமதிக்குக் காத்திருப்பதாகவும் இந்திய கப்பல் போக்குவரத்து அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஈரான் - அமெரிக்கா இடையே புரிந்துணர்வு ஏற்பட்டதை அடுத்து எண்ணெய், எரிவாயு ஏற்றுமதிக்கு முக்கியான ஹார்முஸ் ஜலசந்தி கடல்வழிப்பாதை திறக்கப்பட்டு கப்பல் போக்குவரத்து சீராகி வருகிறது.

போரினால் பாரசீக வளைகுடாவில் சிக்கியிருந்த நூற்றுக்கணக்கான கப்பல்கள் அனுமதியுடன் வெளியேற தொடங்கியுள்ளன.

இது மத்திய கிழக்கில் இருந்தும் வரும் கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜியை அதிகம் நம்பியிருக்கும் இந்தியாவுக்கு நிம்மதியாக அமைந்துள்ளது.

கப்பல்கள்

இந்நிலையில் ஏற்கனவே இந்தியாவிற்கு வரவிருக்கும் 30 கப்பல்கள் ஏற்கனவே ஜலசந்தியைப் பாதுகாப்பாகக் கடந்துவிட்டதாகவும், மேலும் 26 கப்பல்கள் பயண அனுமதிக்குக் காத்திருப்பதாகவும் இந்திய கப்பல் போக்குவரத்து அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இன்னும் அனுமதிக்கு காத்திருக்கும் 26 இந்தியக் கப்பல்களில், 3 கப்பல்களில் எரிபொருளும், 10 கப்பல்களில் உரங்களும், மீதமுள்ள 13 கப்பல்களில் இதர அத்தியாவசியப் பொருட்களும் ஏற்றப்பட்டுள்ளன.

அதேபோல அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனத்திற்கு சொந்தமான இரண்டு பெரிய இயற்கை எரிவாயு டேங்கர் கப்பல்கள் ஏற்கனவே தமிழ்நாட்டின் எண்ணூர் மற்றும் கேரளாவின் கொச்சிக்கு வந்து சேர்ந்துள்ளன.

ஹார்முஸ் ஜலசந்தி வழியாகப் போக்குவரத்து இதேபோல சீராக தொடர்ந்தால், நாட்டில் உயர்தப்பட்ட எரிபொருள், பெட்ரோல், டீசல் விலைகள் குறைக்கப்படுமா அல்லது அதே விலையில் தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.