ஹமாஸ் இயக்கத்தின் முக்கிய உறுப்பினர் ஒருவரை, இஸ்ரேல் தங்கள் நாட்டின் சிறையில் அடைத்துள்ள நிலையில், தற்போது அவரை கொல்லப்போவதாக இஸ்ரேல் நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் காணொளி காட்சி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இஸ்ரேலில் உள்ள ஜெருசலேம் நகரில் பேருந்துகளை குறிவைத்து கடந்த 1966-ஆம் ஆண்டு ஹமாஸ் அமைப்பு தற்கொலைப் படை தாக்குதல்களை நடத்தியது.
ஜெருசலேமில் திட்டமிட்டு நடந்த தாக்குதலில், 45 பேர் பேர் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து இந்த தாக்குதலுக்கு உடந்தையாக இருந்ததாக கூறி, ஹமாஸ் இயக்க உறுப்பினரான ஹசன் சலாமேவை இஸ்ரேல் கைது செய்து தங்கள் நாட்டின் சிறையில் அடைத்தது.
மேலும் இந்த இஸ்ரேலில் 1966 கால கட்டத்தில் தொடர்ச்சியாக நடந்த தற்கொலைப்படை தாக்குதல்களின் ஒரு பகுதியாக அமைந்தன.
இதையடுத்து கைது செய்யப்பட்ட சலாமே, குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இதற்கிடையில் கடந்த மார்ச் மாதம், இஸ்ரேல் ராணுவ நீதிமன்றங்களால் விசாரிக்கப்படும் பாலஸ்தீனியர்கள் சம்பந்தப்பட்ட பயங்கரவாத வழக்குகளில் தொடர்புடைய நபர்களுக்கு மரண தண்டனை விதிக்க வழிவகை செய்யும் சட்டத்தை இஸ்ரேல் நாடாளுமன்றம் நிறைவேற்றியது.
இந்த நிலையில் இஸ்ரேல் சிறையில் பல வருடங்களாக கைதியாக அடைக்கப்பட்டுள்ள, ஹமாஸ் மூத்த உறுப்பினரான ஹசன் சலாமேவுக்கு மரண தண்டனையை நிறைவேற்றப்போவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இஸ்ரேல் நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இட்டாமர் பென்-க்விர் எக்ஸ் தளத்தில் ஒரு காணொளி காட்சியை பதிவிட்டுள்ளார். அவர் அந்த பதிவில், “நான் உன்னை கொல்ல விரும்புகிறேன்; நான் உனக்கு மரணதண்டனை விதிக்க விரும்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
பென்-க்விர் வெளியிட்ட காணொளி காட்சியை தொடர்ந்து, இஸ்ரேல் நாட்டின் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மற்ற பாலஸ்தீனிய கைதிகளுக்கும் மரண தண்டனையை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.