வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளிட்டவைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்துகிறது.
இந்த நிலையில் துபாய் கடற்பரப்பில் நிறுத்தப்பட்டிருந்த குவைத்தின் அல்-சல்மி என்ற எண்ணெய் கப்பல் மீது ஈரான் டிரோன் தாக்குதல் நடத்தியது. அந்த கப்பலில் கச்சா எண்ணெய் ஏற்றப்பட்டிருந்தது.
டிரோன் தாக்குதலால் கப்பல் தீப்பிடித்து எரிந்தது. இதில் மேல்தளம் கடும் சேதம் அடைந்தது. தீயை அணைக்க கடல்சார் தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடினார்கள்.
இத்தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் கப்பலில் இருந்த 24 பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே கப்பலில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
சவுதி அரேபியாவின் அல்-கார்ஜ் மாகாணத்தில் டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. இதில் ஒரு டிரோனின் பாகங்கள் கீழே விழுந்ததில் 6 வீடுகள் சேதம் அடைந்தன.