தந்தையர் தினம் தந்தையர் தினம்
உலகம்

தந்தையர் தின கொண்டாட்டம் இன்று!

அன்பும் பரஸ்பரமும் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்வோம்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டிற்கான தந்தையர் தினம் உலகளவில் இன்று கொண்டாடப்படுகிறது. 1900-ம் முதல் இத்தினம் கொண்டாடப்படுகிறது.

தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்

எனும் திருக்குறளுக்கு இணங்க தன் வாழ்நாள் முழுவதும் பெற்ற பிள்ளைகளுக்காக அர்ப்பணித்து உழைக்கும் அன்பும் அறிவு நிறைந்த கண்டிப்பும் கொண்ட தந்தையர்களுக்கு தமது அன்பும் பரஸ்பரமும் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்வோம்.

அதேபோல்,

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்

எனும் திருக்குறளின்படி தந்தையின் அறிவையும் அனுபவத்தையும் ஏற்று தத்தம் வாழ்க்கையில் அடுத்தடுத்த கட்டங்களுக்கு முன்னேறுவோம். குடும்பம் ஒரு களஞ்சியம் என்பது போல, தாயின் அன்போடு தந்தையின் வழிகாட்டுதலையும் ஏற்று பிள்ளைகள் அவரோடு நேரம் ஒதுக்கி இன்றய நாளை கொண்டாடி மகிழ்வோம்.