அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஒரு பங்கு வழங்கப்படும் என எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான எலான் மஸ்க் பரபரப்பான அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த எலான் மஸ்க் உலகின் நம்பர் 1 பணக்கராரராக இருந்து வருகிறார். இந்நிலையில் அடுத்த ஆண்டு அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் தனது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஒரு பங்கினை இலவசமாக வழங்க உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
தனக்கு சொந்தமான எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் அவர் இதை தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இந்தப் பங்குகள் எவ்வாறு விநியோகிக்கப்படும் மற்றும் அதற்கான தகுதி நிபந்தனைகள் என்ன என்பது குறித்த விவரங்களை அவர் வெளியிடவில்லை.
பங்குகள் நேரடியாகக் குழந்தைகளுக்கு வழங்கப்படுமா? அல்லது அவர்களின் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களின் கட்டுப்பாட்டில் உள்ள கணக்குகளில் அவை வரவு வைக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
கடந்த ஜூன் மாத்யம் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீட்டிற்கு (IPO) சுமார் நான்கு மாதங்களுக்கு பிறகு மஸ்க் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.
IPO என்பது ஒரு தனியார் நிறுவனம் தனது பங்குகளை முதல் முறையாகப் பொதுமக்களுக்கு விற்பனைக்கு வைத்து, பங்குச் சந்தையில் பட்டியலிடுவதை குறிக்கிறது.
தற்போதைய மதிப்பீடுகளின்படி, அமெரிக்காவில் 18 வயதுக்குட்பட்ட சுமார் 7.2 கோடி குழந்தைகள் உள்ளனர்.
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை தற்போது 146 டாலராக வர்த்தகமாகிறது. இந்த மதிப்பீட்டின் அடிப்படையில், மஸ்க் அறிவித்த இந்த மாபெரும் திட்டத்திற்கு சுமார் 10.5 பில்லியன் டாலர் (ரூ. 99,707 கோடி) செலவாகும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
அமெரிக்காவில் அடுத்த மாதம் இடைக்கால தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அதிபர் டிரம்ப்பின் ஆளும் குடியரசு கட்சிக்கு எலான் மஸ்க் சுமார் 276 மில்லியன் டாலரை (சுமார் 26,343 கோடி ரூபாய்) நிதியாக வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.