உலகம்

ஜப்பானில் 6.1 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம்

கடந்த 25-ம் தேதி ஜப்பானில் 6.9 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஜப்பானின் வடகிழக்குப் பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6.1 ரிக்டர் அளவில் பதிவானது.

இவாடே மாகாணத்திற்கு அப்பால் பசிபிக்கில் 40 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநிலடுக்கம் மையமிட்டது.

ஆனாலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை என வானிலை மையம் தெரிவித்தது.

முன்னதாக, கடந்த 25-ம் தேதி ஜப்பானின் இவாத்தேவின் வடக்கு பகுதிக்கு அப்பால் 6.9 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் மையப்புள்ளியின் ஆழம் 50 கிலோமீட்டராக இருந்தது என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. நிலநடுக்கத்தால் ஏற்படட் சேத விவரங்கள் வெளியாகவில்லை.