சிக்கிமில் 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இமயமலையை ஒட்டி அமைந்துள்ள சிக்கிம்-நேபாள் பகுதியில் நிலநடுக்கம் எற்பட்டுள்ளது.
இன்று காலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 4.9 ஆக பதிவானது.
மேற்கு சிக்கிமில் யுக்சோம் க்கு வடகிழக்கே கியால்சிங்க் மாவட்டத்தில் காலை 4.30 மணியளவில் பூமிக்கு 40 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
சிக்கிமில் தலைநகர் கேங்டாக் உட்பட வடக்கு பகுதிகளில் இந்த நிலநடுக்கத்தால் மெலிதான நில அதிர்வு பதிவானது.
இந்த நிலநடுக்கத்தால் எந்தவித சேதமும் பதிவாகவில்லை என அதிகாரிகள் தெரிவிதுள்ளனர்.
முன்னதாக நேற்று இமயமலை பகுதியில் அமைந்துள்ள அருணாச்சல பிரதேச பகுதியில் மெலிதான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இமாச்சல பிரதேச மாநிலத்தின் சிம்லா மாவட்டத்தில் 3.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் அதிர்வுகள் ஜுப்பல் மற்றும் ரோஹ்ரு பகுதிகளில் உணரப்பட்டன. இந்த நிலநடுக்கத்தால் இதுவரை உயிரிழப்போ அல்லது சேதமோ ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேசிய நில அதிர்வு ஆய்வு மையத்தின்படி, இந்த நிலநடுக்கம் நேற்று இரவு சுமார் 9.50 மணியளவில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டது.
மாநில தலைநகரில் இருந்து சுமார் 90-110 கி.மீ. தொலைவில் உள்ள ஜுப்பல் மற்றும் ரோஹ்ரு ஆகிய பகுதிகளில் சில வினாடிகள் நீடித்த நில அதிர்வுகள் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.