கோப்புப்படம்  
உலகம்

மீண்டும் ஒரு கொலை முயற்சி.. உயிர்தப்பிய இரண்டே நாட்களில் பிரசாரத்திற்கு திரும்பிய டிரம்ப்

கொலை முயற்சியில் துப்பாக்கி குண்டு டிரம்பின் காதை உரசி சென்றது. துப்பாக்கி வைத்திருந்ததை டொனால்டு டிரம்ப்-இன் பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் அதிபர் மீது இதுவரை இரண்டு முறை கொலை முயற்சி சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. முதல் முறை அரங்கேறிய கொலை முயற்சியில் துப்பாக்கி குண்டு டிரம்பின் காதை உரசி சென்றது.

அப்போது நூலிழையில் உயிர்தப்பிய டிரம்ப் அதன் பிறகு தேர்தல் பரப்புரைகளில் தீவிரம் காட்டினார். இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் டிரம்ப் உரையாற்றிக் கொண்டிருந்த இடத்தில் மர்ம நபர் துப்பாக்கி வைத்திருந்ததை டொனால்டு டிரம்ப்-இன் பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இதனால் டிரம்ப் மீது நடத்தப்பட இருந்த மற்றொரு துப்பாக்கி சூடு சம்பவம் தோல்வியில் முடிந்தது. அதிபர் தேர்தலில் களம் காணும் டொனால்டு டிரம்ப் மீது தொடர்ச்சியாக துப்பாக்கி சூடு நடத்தப்படும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

மேலும், துப்பாக்கி சூடு முயற்சி முடிந்த இரண்டே நாட்களில் டிரம்ப் மீண்டும் தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்ட சம்பவம் அரங்கேறியது. இரண்டாவது முறை துப்பாக்கி சூடு நடத்தப்பட இருந்தது பற்றி பேசிய டிரம்ப், ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் நான் நாட்டை காப்பாற்றி விடுவேன் என்று எண்ணி என்னை சுட்டுத் தள்ள முயற்சிக்கிறார்கள் என்று குற்றம்சாட்டினார்.

SCROLL FOR NEXT