உலகம்

பலி எண்ணிக்கை 920 ஆக உயர்வு: வெனிசுலாவில் மீண்டும் நிலநடுக்கம்

வெனிசுலா நிலநடுக்கங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

வெனிசுலாவில் இந்திய நேரப்படி நேற்று முன்தினம் அதிகாலை 3 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 7.2 மற்றும் 7.5 என இரு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் பதிவாகின. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.

வெனிசுலா நிலநடுக்கங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 920 ஆக உயர்ந்துள்ளது. 3,300-க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர் என அந்நாட்டின் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார்.

நாடுமுழுவதும் அவசரநிலை பிறப்பிக்கப்படுவதாக அறிவித்த இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ், மக்கள் அனைவரும் விழிப்புடனும், பாதுகாப்புடனும் இருக்கவேண்டும் என தெரிவித்தார்.

இந்நிலையில், மீட்புப் பணிகள் நடந்து வரும் நிலையில், வெனிசுலாவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவானது. கராகஸ் மற்றும் மராகாய் நகரங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என தகவல் வெளியானது.

சக்திவாய்ந்த நிலநடுக்கங்களுக்குப் பிறகும் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.