வெனிசுலாவில் இந்திய நேரப்படி கடந்த 25-ம் தேதி அதிகாலை 3 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 7.2 மற்றும் 7.5 என இரு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் பதிவாகின. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.
நிலநடுக்கங்களில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், வெனிசுலா நிலநடுக்கங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,430 ஆக உயர்ந்துள்ளது. ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என அந்நாட்டின் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார்.
நாடுமுழுவதும் அவசரநிலை பிறப்பிக்கப்படுவதாக அறிவித்த இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ், மக்கள் அனைவரும் விழிப்புடனும், பாதுகாப்புடனும் இருக்கவேண்டும் என தெரிவித்தார்.
முன்னதாக, மீட்புப் பணிகள் நடந்து வரும் நிலையில் வெனிசுலாவில் மீண்டும் 4.9 ரிக்டர் அளவுகோலில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.
சக்திவாய்ந்த நிலநடுக்கங்களுக்குப் பிறகும் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.