ரஷியா மற்றும் உக்ரைன் ஆகுய நாடுகள் கருங்கடல் பகுதியில் வர்த்தக கப்பல் மீது நடத்தி வரும் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்றும், இந்த தாக்குதல் 1943 அன்று நடந்த வங்காள பஞ்சத்திற்கு வழிவகுக்கும் என்றும் ஐ.நா.வுக்கான இந்திய பிரதிநிதி ஹரிஷ் பார்வதனேனி தெரிவித்துள்ளார்.
ரஷியா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு முக்கிய வர்த்தக போக்குவரத்து தளமாக கருங்கடல் பகுதி விளங்குகுறது.
உக்ரைனில் அமைந்துள்ள ஒடெசா மற்றும் கிரிமியன் தீபகற்பம் உட்பட வடக்கு மற்றும் வடமேற்கு ஆகிய கடற்கரைகளை ஒட்டி கருங்கடலின் ஒரு பகுதி அமைந்துள்ளது.
ரஷியாவின் கிராஸ்னோடர் கிராய் மற்றும் சோச்சி உள்ளிட்ட வடகிழக்கு கடற்கரையை ஒட்டி கருங்கடலின் மற்றொரு பகுதி அமைந்துள்ளது.
இந்த சூழலில் ரஷியா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடந்து வரும் நிலையில், கருங்கடல் பகுதியில் செல்லும் வர்த்தக கப்பல் மீது தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சரக்கு கப்பல் மீதான தாக்குதலை நிறுத்தவில்லை என்றால், தானிய வர்த்தகம் பாதிக்கப்பட்டு, 1943 ஆம் ஆண்டு நடந்த வங்காள பஞ்சத்திற்கு வழிவகுக்கும் என ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியும் தூதருமான ஹரிஷ் பார்வதனேனி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்றும் வரும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் உயர்மட்ட கூட்டத்தில் இந்திய பிரதிநிதி ஹரிஷ் பார்வதனேனி கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், “ரஷியா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையேயான போர், ஐந்து ஆண்டுகளை கடந்து நடந்து வருகிறது.
இந்த போர் ஒவ்வொரு நாளும் மனிதகுலத்தை பின்னோக்கி தள்ளி கொண்டே இருக்கிறது. பிரதமர் மோடி குறிப்பிட்டது போல, உலகம் முடிவற்ற போரில் இருந்து போரின் முடிவை நோக்கி நகர வேண்டும்.
வர்த்தக கப்பல் மீதான தாக்குதல், எரிசக்தி, உரம் போன்றவை விவாயிகளுக்கு கிடைப்பதில் இடையூறு ஏற்படுத்தி, விவசாயத்தை சீர்குலைத்து வருகிறது.
ரஷியா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகள், கோதுமை, மக்காச்சோளம் மற்றும் பார்லி ஆகியவற்றின் உலகளாவிய ஏற்றுமதியில் கிட்டத்தட்ட கால் பங்கை கொண்டுள்ளன.
கருங்கடல் பகுதியில் சரக்கு கப்பல் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல், தானியக் களஞ்சியங்கள் உலக நாடுகளுக்கு கிடைப்பதை தடுத்து வருகிறது.
ஆப்கானிஸ்தானுக்கு கோதுமை விநியோகம், சூடானுக்கு அரிசி விநியோகம் மற்றும் பாலஸ்தீனத்திற்கு தேவையான உணவு வசிதிகள் தடைபட்டு வருகின்றது.
வங்காளத்தில் கடந்த 1943 ஆம் ஆண்டு நடந்த பஞ்சம் காரணமாக 30 லட்சத்திற்கும் அதிமான மக்கள் உயிரிழந்தனர்.
தற்போது வர்த்தக கப்பல் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல், இந்த வகையான ஒரு பஞ்சத்திற்கு மீண்டும் வழிவகை செய்யும்.
மேலும் கருங்கடல் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் இதுவரையில் இந்திய மாலுமிகள் 9 பேர் உயிரிழந்துள்ளனர்” என அவர் கூறினார்.