பராகுவே அதிபர் சாந்தியாகோ பென்யா தனது பதிவியை ராஜினாமா செய்துள்ளார்.
தென் அமெரிகாவில் உள்ள பராகுவே நாட்டின் அதிபர் சாந்தியாகோ பென்யா தனது பதிவியை ராஜினாமா செய்துள்ளார்.
பராகுவேயின் முன்னணி டிஜிட்டல் வங்கியான யுனோ வங்கி கடுமையான நிதி நெருக்கடிக்கு உள்ளாகியது.
இதனால் கடந்த நவம்பர் 3ஆம் தேதி அந்நாட்டு மத்திய வங்கி அதன் நிர்வாகத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது.
இந்த வங்கியில் சுமார் 30 இலட்சம் வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்துள்ளனர்.
வங்கி சேவைகள் முடக்கப்பட்டதால் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களின் சேமிப்புகள், ஓய்வூதியங்கள் மற்றும் சம்பளங்கள் முடங்கியுள்ளன. பில்லியன் கணக்கான டாலர் அரசு நிதிகளும் கேள்விக்குறியாகியுள்ளன.
இதனிடையே யுனொ வங்கி வங்கியின் முன்னாள் உரிமையாளர் குழுமத்துக்கும் அதிபர் சந்தியாகோ பென்யாவுக்கும் இடையிலான முந்தைய வர்த்தகத் தொடர்புகள் கவனம் பெற்றது.
எனவே வங்கி நெருக்கடி அதிபர் மீதான ஆத்திரமாக மாறியுள்ளது. தலைநகர் அசுன்சியோனில், தொடர்ந்து மூன்றாவது நாளாக ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நெருக்கடியை தொடர்ந்து அதிபரை எதிராகப் பதவி நீக்க நடவடிக்கையை முன்னெடுக்க நாடாளுமன்றத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில் அவரே முன்வந்து தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.
"நான் ஏதேனும் ஒரு தருணத்தில் தவறிழைத்திருந்தால் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்" என்று அவர் சமூக ஊடகங்களில் வெளியிட்ட காணொளிச் செய்தியில் தெரிவித்தார்.
"உங்கள் நம்பிக்கைக்குத் துரோகம் செய்ய வேண்டும் என்பது எனது நோக்கமாக இருந்ததில்லை" என்று அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஸ்திரத்தன்மை, சமூக அமைதி மற்றும் நமது ஜனநாயக நிறுவனங்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தைக் கருத்தில் கொண்டு தாம் பதவி விலகுவதாக சாந்தியாகோ பெனா குறிப்பிட்டுள்ளார்.
பராகுவேயின் நலனை விட எந்தப் பதவியும் மேலானதாக இருக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
நேற்று அவர் தனது ராஜினாமாவை அறிவித்த சில நிமிடங்களிலேயே, அவரைப் பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை கீழ்சபை 78 ஆதரவு வாக்குகளுடன் ஒருமனதாக நிறைவேற்றியது.
பதவி நீக்கத் தீர்மானம் மேல்சபையான செனட் சபைக்குச் செல்லும். அங்கு அதிபரை பதவியிலிருந்து நீக்க மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்படுகிறது.
ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன், துணை ஜனாதிபதி பெட்ரோ அலீனா ஜனாதிபதி பதவியை ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் ஆகஸ்ட் 2028 வரை, அதாவது பதவிக்காலத்தின் மீதமுள்ள காலத்திற்குப் பணியாற்றுவார்.