SBI வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருட்டு

எஸ்.பி.ஐ. வாடிக்கையாளர்களின் சுமார் 3,75,000 தரவுகள் திருடப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எஸ்பிஐ
Published on: 
Summary

எஸ்.பி.ஐ. வாடிக்கையாளர்களின் முக்கிய தகவல்கள் திருடப்பட்டு டார்க் வெப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதால், வாடிக்கையாளர்கள் மத்தியில் கவலை அதிகரித்துள்ளது. வங்கி நிர்வாகம் தகவல் கசிவை உறுதிப்படுத்தியதுடன், பாதுகாப்பு அமைப்புகள் பாதுகாப்பாக உள்ளன என்றும், விசாரணை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்களின் தனிநபர் தகவல்கள் திருடப்பட்டு டார்க் வெப்பில் கசியவிடப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் உள்ள வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

ஹேக்கர்கள் மேற்கொண்ட இந்த இணையவழித் தாக்குதலில், எஸ்.பி.ஐ. வாடிக்கையாளர்களின் சுமார் 3,75,000 தரவுகள் திருடப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதில் முதற்கட்டமாக, 3,897 வாடிக்கையாளர்களின் பெயர்கள், செல்போன் எண்கள், வீட்டு முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் உள்ளிட்ட மிக முக்கியமான தனிநபர் தகவல்கள் டார்க் வெப்பில் பதிவேற்றப்பட்டுள்ளதை இணையப் பாதுகாப்பு வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்தத் தகவல் திருட்டு சம்பவம் குறித்து எழும் அச்சங்களுக்கு பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகம் உடனடியாக விளக்கம் அளித்துள்ளது.

* வாடிக்கையாளர்களின் தகவல்கள் சில கசிந்திருப்பது உண்மைதான் என்றாலும், வங்கியின் முதன்மைச் செயல்பாடுகளுக்கோ அல்லது வாடிக்கையாளர்களின் பணப் பரிவர்த்தனைகளுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

* வங்கியின் பிரதானப் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் நிதிச் சேமிப்புகள் முற்றிலும் பாதுகாப்பாக உள்ளன.

* தகவல் கசிவு குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதோடு, கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com