உலகம்

ஜப்பானில் 7-வது முறை தாயான எழுத்தாளர்: குழந்தைகளை பெற்றெடுக்க இதுவே சரியான நேரம் என்கிறார்

ஜப்பானில் சரிந்து வரும் மக்கள்தொகையை ஈடுக்கட்ட பெண்கள குழந்தை பெற்றுக்கொள்ள இதுவே சரியான நேரம் என்று தெரிவித்திருக்கிறார்.

7வது குழந்தை

ஜப்பானில், எழுத்தாளரும் முன்னாள் அரசியல் வேட்பாளருமான கோட்டோ ஹஷிமோட்டோ, தனது ஏழாவது குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

குழந்தை பிறப்பை சமூக வளைத்தளத்தில் பதிவிட்டு சமூக ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். அந்த பதிவில் குழந்தையை பெற்றெடுக்க உதவிய அனைவருக்கும் நன்றி என்றும் , குழந்தை தற்போது நன்றாக இருப்பதாகவும் ,இதற்கு உதவிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நன்றி என்றும் தெரிவித்திருக்கிறார்.

சரியான நேரம்

ஜாப்பானில் சரிந்து வரும் பிறப்பு விகிதத்தினை ஈடுகட்ட ஜப்பானில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் குழந்தை பெற்றுகொள்ள இதுவே சரியான நேரம் என்றும் ,தேசத்தின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் பெண்கள் கையில்தான் உள்ளது என்றும் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

விமர்சனம்

ஜப்பான் நாட்டில் பலரும் குழந்தைகளை வேண்டாம் என்றும் ஒரு குழந்தையை மட்டும் பெற்றுக்கொள்ளும் சூழல் இருக்கும் நிலையில் இவரின் சமூக வளைத்தள பதிவு பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளது , இவரின் இந்த பதிவிற்கு நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT