ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் எல்நினோ கால மாற்றத்தால் நேற்று திடீரென வீசிய வெப்பக்காற்று வீசியது. இதன் காரணமாக, அந்த பகுதியில் தீ மூட்டுவதற்கு அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
சிட்னி நகரத்தில் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் நிலவி வருவதால், இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் நகரத்தில் வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் ஆக பதிவானதாக வானிலை மையம் தெரிவித்தது. இந்த வெப்பநிலை சராசரியாக நிலவும் அளவை விட 13 டிகிரி செல்சியஸ் அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிட்னி விமான நிலையத்தில் நேற்று காலை வேளையின்போது வெப்பநிலை 28.6 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியிருந்தது. இது செப்டம்பர் மாதத்தின் சராசரி அதிகபட்ச வெப்பநிலையை விட 7 டிகிரி அதிகமாகும்.
வெப்பநிலை அதிகரித்து காணப்படுவது தொடர்பாக வானிலை ஆய்வாளர்கள் கூறுகையில், காலையில் உருவாக இருக்கும் மிதமான முதல் வலுவான வடமேற்கு காற்று, வறண்ட மற்றும் பருவத்திற்கு ஒவ்வாத வெப்பமான சூல்நிலையுடன் இணைந்து, சிட்னி நகரம் முழுவதும் தீ விபத்து ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதாக தெரிவித்துள்ளது.
சிட்னி நகரில் தீ அபாயம் நிகழ்வதற்கு அதிகப்படியான சூழ்நிலைகள் உள்ளதால், மாநில தீயணைப்புத் துறை அதிகாரிகள் தீ மூட்டுவதற்கு முழுமையான தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
சுமார் 3 கோடி மக்கள் தொகை கொண்ட சிட்னி நகரில், எல்நினோ காலநிலை மாற்றத்தால் அதிகப்படியான வெப்பமும் வானிலை மாற்றமும் நிலவி வருகிறது.