உலகம்

‘உக்ரைனில் அமைக்கப்படும் எந்தவொரு ஆயுத உற்பத்தி ஆலையும் தாக்கி அழிக்கப்படும்’ - ரஷியா மிரட்டல்!

உக்ரைன் மண்ணில் உள்ள அத்தகைய எந்தவொரு வசதிகளும் ரஷிய ஆயுதப் படைகளின் முறையான இலக்குகளாக மாறும்.

மேற்கத்திய நாடுகளால் உக்ரைனில் அமைக்கப்படும் எந்தவொரு ஆயுத உற்பத்தி ஆலையும் தாக்கி அழிக்கப்படும் என ரஷியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

உக்ரைனில் நீண்ட தூர ஏவுகணைகளைத் தயாரிப்பதற்கான உற்பத்தி ஆலையை அமைப்பதற்கான திட்டங்கள் குறித்து வெளியான செய்திகளை தொடர்ந்து ரஷியாவின் இந்த மிரட்டல் வந்துள்ளது.

“உக்ரைன் மண்ணில் உள்ள அத்தகைய எந்தவொரு வசதிகளும் ரஷிய ஆயுதப் படைகளின் முறையான இலக்குகளாக மாறும்” என ரஷிய செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.

ஜெர்மனி மீதான தாக்குதலுக்கு மறுப்பு!

உக்ரைனில் ஆயுத உற்பத்தியை விரிவுபடுத்துவதற்கான மேற்கத்திய நாடுகளின் மேலதிக முயற்சிகள், அந்நாட்டிற்குதான் இன்னும் சிக்கல்களை உருவாக்கும் என்றும், மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்வதாகவும், தங்களது இலக்கை அடைய அமைதியான முறையில் தீர்வைக் காண மாஸ்கோ தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆகஸ்ட் 4 அன்று லைப்சிக் விமான நிலையத்தைக் குறிவைத்து, வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ஆளில்லா விமானம் மூலம் நடத்தப்பட்ட தாக்குதல் முயற்சிக்குப் பின்னால் ரஷ்யா இருப்பதாகக் கூறப்படும் ஜெர்மனியின் குற்றச்சாட்டுகளையும் பெஸ்கோவ் நிராகரித்தார்.

SCROLL FOR NEXT