மரியா கார்மென் அபாஸ்கல்  
உலகம்

ஒரு தேசத்தையே உலுக்கிய 87 வயது மூதாட்டி.. மக்கள் போராட்டத்தின் சின்னமாக மாறியவர் உயிரிழப்பால் கண்ணீர் வடிக்கும் ஸ்பெயின்

மாட்ரிடில் அவரும் பிறரும் போராடிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த போலீஸ் அனைவரையும் அங்கிருந்து வலுக்கட்டாயமாக விரட்டியது.

ஸ்பெயினில் வீடுகள் பற்றாக்குறையால் வெடித்துள்ள மக்கள் போராட்டத்திற்கு காரணமாக மூதாட்டி உயிரிழந்துள்ளார்.

ஸ்பெயினில் பிரதமர் பெட்ரோ சான்செஸ் தலைமையிலான மைனாரிட்டி அரசாங்கம் நாட்டில் முன்கூட்டியே தேர்தலை அறிவித்துள்ளது. காரணம் மக்கள் போராட்டம்.

பற்றாக்குறை

தலைநகர் மாட்ரிட் உட்பட ஸ்பெயின் முழுவதும் உள்ள 50 நகரங்களில் மிகப்பெரிய அளவில் வீடுகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

ஸ்பெயினில் தற்போது சுமார் 700,000 வீடுகளுக்குப் பற்றாக்குறை இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

வாடகைகள் சராசரியாக 8.5% உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாட்ரிட் மற்றும் பார்சிலோனா போன்ற நகரங்களில் இந்த உயர்வு இன்னும் அதிகமாக இருக்கும். மேலும், வீட்டு விலைகளும் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகின்றன.

தோல்வி

இதை சரிசெய்ய பிரதமர் பெட்ரோ சான்செஸ் தலைமையிலான மைனாரிட்டி அரசாங்கம் நாடாளுமன்றத்தில் இரண்டு முக்கிய முன்மொழிவுகளை கடந்த வாரம் அறிமுகப்படுத்தியது.

2030ஆம் ஆண்டு வரை நலிவடைந்த பிரிவினரை அவர்களது வீடுகளில் இருந்து வெளியேற்றுவதை நிறுத்துதல் மற்றும் சில வாடகை ஒப்பந்தங்களை நீட்டித்தல் போன்ற நடவடிக்கைகள் இதில் அடங்கும்.

இருப்பினும், பாப்புலர் பார்ட்டி, வோக்ஸ் மற்றும் ஜுண்டாஸ் ஆகிய எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் இந்த முன்மொழிவுகள் தோற்கடிக்கப்பட்டன.

இது மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மற்றோரு சம்பவமும் மக்கள் கோபத்தை மேலும் அதிகரித்து போராட்டத்திற்கு வழிவகுத்துள்ளது.

போராட்டம்

மக்களை போராடிய தூண்டிய நீண்டகால காரணியாக வீடுகள் பற்றாக்குறை இருந்தாலும், மக்கள் வீதியில் இறங்க மற்றொரு உடனடி காரணியும் உள்ளது. அதுதான் மரியா டெல் கார்மென் அபாஸ்கல் உடைய வெளியேற்றம்.

இவர் சினிமா பிரபலமோ, அரசியல் புள்ளியோ, செல்வாக்குள்ள செல்வந்தரோ கிடையாது. தலைநகர் மாட்ரிடில் உள்ள ஒரு குடியிருப்பில் பல ஆண்டுகளாக வாசித்து வந்த ஒரு சாதாரண பெண்மனி. அவருக்கு வயது 87.

மரியா கார்மென் 70 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் வாழ்ந்து வந்த வீட்டில் இருந்து கடந்த செப்டம்பர் 23 அன்று வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்.

அந்தக் கட்டிடத்தை வாங்கிய முதலீட்டு நிறுவனம் அவரால் செலுத்த முடியாத அளவுக்கு வாடகையை உயர்த்தியது. இந்தச் சம்பவம் நாடு தழுவிய மக்கள் கோபத்தின் சின்னமாக மாறியுள்ளது. அவரும் தள்ளாத வயதில் மக்களுடன் போராட்டக் களத்தில் நின்றார்.

மறைவு

மக்கள் போராட்டத்தின் வலிமையால், ஸ்பெயினில் முன்கூட்டியே தேர்தலை அறிவித்துள்ளார் பிரதமர். இருப்பினும் வீடுகள் பற்றாக்குறைக்கு தீர்வு கோரி மக்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

இந்த சூழலில் நாட்டு மக்களால் மாரிகார்மென் அபாஸ்கல் என பரவலாக அழைக்கப்படும் மூதாட்டி மரியா கார்மென் அபாஸ்கல் உயிரிழந்துள்ளார்.

மாட்ரிடில் அவரும் பிறரும் போராடிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த போலீஸ் அனைவரையும் அங்கிருந்து வலுக்கட்டாயமாக விரட்டியது. அப்போது 87 வயது மரியாவின் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் அவரை ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் சென்று போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மருத்துவமனையில் அவர் உயிரிழந்துவிட்டதாக பின்னர் அறிவிக்கப்பட்டது. அவரின் வழக்கறிஞர் பீட்ரிஸ் டுரோ இதை உறுதி செய்துள்ளார். இருப்பினும் அவரின் மரணத்திற்கான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை.

புரட்சியின் சின்னம்

மரியா எதிர்கொண்ட அநீதியை மக்களுக்கு போராடுவதற்கான ஊக்கத்தை அளித்தது. அவருக்கு நேர்ந்த அநீதி பலருக்கும் நேர்ந்துள்ளது. ஆனால் தனியொரு பெண்மணியாக சமூகத்தின் மிகவும் நலிந்த பிரிவில் ஒருத்தியாக மரியா அநீதியை எதிர்கொண்டது அவரின் வலியுடன் தங்களுடையதை தொடர்புபடுத்திக்கொள்ள மக்களை தூண்டியது.

மக்களுக்கு போராடுவதக்கிறான ஊக்கத்தை வழங்கி போராட்டத்தின் சின்னமாக மக்களின் கோபத்தின் சின்னமாக விளங்கிய மரியாவின் மறைவு சோகத்தை ஏற்படுத்தியிருந்தாலும் அவர் மக்கள் மத்தியில் என்றென்றும் புரட்சியின் சின்னமாக விளங்குவார் என்பது திண்ணம்.

SCROLL FOR NEXT