உலகம்

இந்தியா மற்றொரு வல்லரசு நாடாக உருவாவதற்கு அமெரிக்கா அனுமதிக்காது: ரஷியா குற்றச்சாட்டு

ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெயை வாங்குவதற்கு அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.

இந்தியாவை மற்றொரு சீனாவாக உருவெடுக்க தங்கள் நாடு அனுமதிக்காது என்று அமெரிக்கா கூறியதை சுட்டிக்காட்டி, ரஷிய தூதர் டெனிஸ் அலிபோவ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ரஷியாவிடம் இருந்து, கச்சா எண்ணெயை இந்தியா வாங்குவதற்கு அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.

இதற்கிடையில் ரஷிய எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்கும் நாடுகள் மீது 100 சதவீதம் வரி விதிக்கும் ‘கிரஹாம் சட்டம்’ ஒன்றை அமெரிக்கா சமீபத்தில் தொடங்கியுள்ளது.

கிரஹாம் சட்டம்

கிரஹாம் சட்டமானது, ரஷியாவின் மீது பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்கவும், மேலும் ஈரானுக்கு எதிரான பொருளாதார தடைகளை வலுப்படுத்தவும் அமெரிக்க அதிபர் டிரம்பால் அறிமுகப்படுத்தப்பட்ட சட்டமாக உள்ளது.

பாதுகாப்பு உச்சி மாநாடு

இந்த நிலையில் டெல்லியில் நேற்று நடைபெற்ற என்.டி.டி.வி பாதுகாப்பு உச்சி மாநாட்டில், இந்தியாவுக்கான் ரஷிய தூதர் டெனிஸ் அலிபோவ் மற்றும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இந்த மாநாட்டில் பேசிய ரஷிய தூதர், சீனா போன்ற மற்றொரு வல்லரசு நாடாக இந்தியா உருவாவதை அமெரிக்கா விரும்பவில்லை என தெரிவித்தார்.

ரஷிய தூதர்

இதுகுறித்து இந்தியாவுக்கான ரஷிய தூதர் டெனிஸ் அலிபோவ் கூறுகையில், இந்த ஆண்டு நடைபெற்ற ரைசினா மாநாட்டில், அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகளில் ஒருவர், இந்தியாவை அடுத்த சீனா போன்ற ஒரு போட்டியாளராக உருவாவதை அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது என்று கூறியிருந்தார்.

மேலும் அவர் கூறுகையில், “இந்திய மேலும் வலுப்பெற்று, இறுதியில் ஒரு வல்லரசு நாடாக மாறும்போது, அது முடியாத ஒன்றாக இருக்கும்.

எனவே இந்தியாவை கட்டுப்படுத்த தன்னால் இயன்ற அனைத்தையும் அமெரிக்கா செய்யும்” என்று கூறியிருந்தார்.

இந்தியா ரஷியாவிடமிருந்து வாங்கும் எண்ணெயை தனது சொந்த நாட்டு மக்களின் நலனுக்காகவும், பொருளாதாரத்திற்காகவும் வாங்குகிறது.

மேலும் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய், ஒரு போட்டித்தன்மை வாய்ந்த விலையில் கிடைக்கிறது.

இந்தியா வளர்ச்சி அடையும்போது, இந்த வகையான அழுத்தங்களும் தந்திரங்களும் தொடர்ந்து தீவிரமடையும் என நான் நினைக்கிறேன்.

ரஷியாவுடனான இந்தியாவின் தூதரக உறவுகள் 1947 ஏப்ரலில் நிறுவப்பட்டன. 1991-ல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, ரஷிய கூட்டமைப்புடனான இந்தியாவின் உறவுகள் தொடர்ந்தன.

நம்பிக்கையும் மரியாதையுமே நமது உறவின் பண்புகளாகும். நம்பகத்தன்மையற்ற கூட்டாளிகளுடன் நீங்கள் வணிகம் செய்ய மாட்டீர்கள்.

இத்தனை பத்தாண்டுகளாக, நாம் ஒருவருக்கொருவர் நம்பகமான பங்காளிகளாகவும், நண்பர்களாகவும் இருந்து வருகிறோம்.

ரஷியா மற்றும் இந்தியா ஆகிய இரு தரப்பிலும், எந்தவொரு உடனடி உலகளாவிய போக்கையும் சார்ந்து எங்கள் உறவுகளை நாங்கள் ஒருபோதும் அமைத்ததில்லை.

இந்த நிலைத்தன்மையும், இத்தனை ஆண்டுகளாக ஒருவருக்கொருவர் அளித்து வந்த உதவியும், நமது உறவுகள் பரந்த கண்ணோட்டங்களுடன் மேலும் முன்னேறி செல்வதற்கு மிகவும் உறுதியான அடித்தளத்தை அமைத்துள்ளது என்று நான் நினைக்கிறேன்.

ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையேயான சமீபத்திய சந்திப்பு, ரஷியாவும் இந்தியாவும் எதிர்காலத்திற்காக ஒரு வலுவான செயல்திட்டத்தை கொண்டிருப்பதை நிரூபித்துள்ளது” என்று அவர் கூறினார்.

SCROLL FOR NEXT