ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 
உலகம்

ஓமன், குவைத் நாடுகளுக்கு மீண்டும் விமான சேவையை தொடங்கிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

சேவைகள் கட்டம் கட்டமாக மீண்டும் செயல்பாட்டிற்கு வர உள்ளன.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அதிரடி அறிவிப்பு: மேற்கு ஆசிய விமானச் சேவைகள் முழுமையாக மீட்பு – ஓமன், குவைத்திற்கு மீண்டும் விமானங்கள் இயக்கம்!

போர் நிறுத்தம்

மத்திய கிழக்கு போர்ச் சூழல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த குவைத் மற்றும் ஒமன் ஆகிய நாடுகளுக்கான விமான சேவைகளை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் முழுமையாக மீண்டும் தொடங்கியுள்ளது.

புரிந்துணர்வு மூலம் ஈரான் - அமெரிக்கா போர் தற்காலிக நிறுத்தம் கண்டுள்ள நிலையில் மத்திய கிழக்கில் நிலைமை சீரடைந்து வருகிறது.

மீண்டும்

போர்ச் சூழல், விமான எரிபொருள் கட்டண உயர்வு, பயணிகள் இன்மையால் சேவைகளை குறைத்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், நிலைமை சீரடைந்து வருவதால் மத்திய கிழக்கு நாடுகளுக்கான சேவைகளை படிப்படியாக மீண்டும் படிப்படியாக தொடங்கி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக ஓமன் மற்றும் குவைத் நாடுகளுக்கான விமானச் சேவைகள் கட்டம் கட்டமாக மீண்டும் செயல்பாட்டிற்கு வர உள்ளன.

சேவைகள்

கேரளாவின் கோழிக்கோடு - ஓமனின் சலாலா நகரங்களுக்கு இடையேயான விமானச் சேவை ஜூலை 2 முதல் மீண்டும் தொடங்கியுள்ளது. கோழிக்கோடு - குவைத் வழித்தடத்திலான சேவைகள் ஜூலை 3 முதல் மீண்டும் தொடங்குகின்றன. பெங்களூருவில் இருந்து குவைத்திற்கான நேரடி விமானங்கள் ஜூலை 4 முதல் இயக்கப்படவுள்ளன.

இந்த வழித்தடங்களில் இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை வரும் நாட்களில் படிப்படியாக அதிகரிக்கப்படும் என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

தற்போது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் இந்தியா மற்றும் மேற்கு ஆசியா நாடுகளுக்கு இடையே வாரத்திற்கு சுமார் 780 விமானங்களை இயக்குகிறது.