ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி பயில்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஈரானுக்கு குடிபெயர்ந்து கல்வி கற்று வரும் பெண்களின் கல்வியும் தற்போது தடை பட்டுள்ளதாக பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் கடந்த 2021 இல் தலிபான் ஆட்சிக்கு வந்ததை தொடர்ந்து, 2022 ஆண்டு அந்த நாட்டில் உள்ள மாணவிகள் ஆறாம் வகுப்புக்கு மேல் படிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.
மேலும், பெண்கள் பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கும் தடை விதிக்கப்பட்டது.
இதையடுத்து 2024 டிசம்பரில் பெண்கள் மருத்துவ பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து படிப்பதற்கும் தலிபான் அரசாங்கம் தடை விதித்தது.
இதைத்தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் சுமார் 24 லட்சம் சிறுமிகளுக்கு இடைநிலை கல்வி மறுக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்தது.
இந்த சூழலில், ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறி பல மாணவிகள் ஈரான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 2022 இல் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறி, நான்கு ஆண்டுகளாக ஜஹ்ரா என்ற மாணவி ஈரானில் கல்வி பயின்று வருகிறார்.
இதையடுத்து தற்போது அவரது விசா காலாவதியானதை தொடர்ந்து, ஈரானில் பள்ளி படிப்பை தொடர்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஜஹ்ரா தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து மாணவி ஜஹ்ரா கூறுகையில், ஈரானில் கல்வி கற்பதற்காக நாங்கள் எங்கு விண்ணப்பித்தாலும், எங்களுக்கு சாதகமான பதில் எதுவும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
இந்த விதமான தடை தனக்கு மட்டுமல்லாமல், தன்னுடன் கல்வி பயிலும் பல ஆப்கானிய மாணவிகளுக்கும் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஈரான் அரசாங்கம் குடியேறி மாணவிகள் பலருக்கு கல்வி பயில்வதற்கு தடை விதித்துள்ள நிலையில், இதுகுறித்து ஆப்கானிஸ்தான் மாணவிகள் கூறுகையில், “நான் எப்போதும் படிக்க வேண்டும், முதுகலை பட்டம் பெற வேண்டும்;
மற்றும் என் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என விரும்பினேன். இதற்காக தான் நான் எனது நாட்டை விட்டு வெளியேறினேன்” என கூறினார்.
மேலும் இதுகுறித்து பாகிஸ்தானில் உயர்நிலை பள்ளியை பயின்று வரும் ஆப்கன் மாணவி நிலோஃபர் கூறுகையில், “கடவுள் எங்களை படைத்திருக்கவே கூடாது என்று நான் விரும்புகிறேன்.
நாங்கள் இவ்வளவு துரதிர்ஷ்டசாலிகளாக இருக்க போகிறோம் என்றால், நாங்கள் பிறக்காமலேயே இருந்திருக்கலாம்” என கூறினார்.