உலகம்

இன்னும் 96 மணிநேரத்தில் ஈரான் மீது மிகப்பெரிய அட்டாக்?.. தயார் நிலையில் அமெரிக்க ராணுவம்

ராணுவ தளங்கள் மற்றும் அணுசக்தி வசதிகள் அடங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்னும் 96 மணி நேரத்தில் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஈரான் மீது இன்னும் 96 மணி நேரத்தில் அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்த தயாராக இருக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்க அரசின் அதிகாரிகள் ஒருவரை மேற்கோள் காட்டி அந்நாட்டின் சிஎன்என் செய்தி நிறுவனம் இதை தெரிவித்துள்ளது.

டிரம்ப் கட்டளை

அதில் வெளியான அறிக்கைபடி, அமெரிக்க படைகள் ஏற்கனவே தாக்குதல் நடத்த வேண்டிய இடங்களுக்கு அனுப்பப்பட்டுவிட்டதாகவும், டிரம்ப் உத்தரவு கிடைத்தவுடன் தாக்க தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மிகபெரிய அளவில் இருக்கும் என அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஈரான் ரேடார்களுக்கு புலப்படும் எல்லைகளை தாண்டி ஏவுகணை ஏவுகோள்கள் மற்றும் ராணுவ தளவாடங்கள் ராணுவ தலைவர்களால் தயார்படுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க மத்திய கட்டளையும், தலைமையகமாக பென்டகன் பாரிய அளவிலான இலக்குகளை அடையாளம் கண்டு குறித்து வருவதாகவும் இதிலும் ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்பு, ராணுவ தளங்கள் மற்றும் அணுசக்தி வசதிகள் அடங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இடைக்கால தேர்தல்

இந்த தாக்குதலானது 96 மணிநேரத்திற்குள் என்று கூறப்பட்டாலும் அமெரிக்காவில் வரும் 3ஆம் தேதி இடைக்கால தேர்தல் நடைபெற்று முடிந்த பின்னர் மேற்கொள்ளப்பட வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க ராணுவ இந்நாள், முன்னாள் அதிகாரிகள் கருதுகின்றனர்.

அமெரிக்காவில் இடைக்கால தேர்தல் வரை எந்த தாக்குதலும் இல்லை என டிரம்ப் முன்னரே அறிவித்திருந்தார். ஆனால் இந்த 96 மணி நேர எச்சரிக்கை என்பது தேர்தலின் தீவிரத்தை அதிகரிக்கும் உத்தியாகவும் பார்க்கப்படுகிறது.

இந்த தேர்தல் டிரம்ப்பின் செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய தேர்தலாக அமைந்துள்ளது. அவரின் பொருளாதார மற்றும் குடியேற்ற கொள்கைகள், ஈரான் போர் விவகாரம் அவரின் செல்வாக்கை பெருமளவில் அமெரிக்க மக்கள் மத்தியில் குன்றச் செய்துள்ளதை சமீபத்திய கருத்துக்கணிப்புகள் தெரிவித்தன.

இஸ்ரேல் தேர்தல்

மேலும் மறுபுறம் இஸ்ரேலில் கடந்த அக்டோபர் 27 அன்று நடந்துமுடிந்த தேர்தலில் ஆளும் நேதன்யாகுவின் லிகுத் கட்சியின் கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் கூட்டணி அரசு அமைக்கும் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இஸ்ரேல் தேர்தலில் வென்றால் ஈரான் மீதான போர் தொடரும் என நேதன்யாகு முன்னரே அறிவித்திருந்தார்.

மத்திய கிழக்கு

அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்தே கடந்த பிப்ரவரியில் ஈரான் மீதான போரை தொடங்கிய நிலையில் அமெரிக்கா அதை முன்னெடுத்து சென்றுகொண்டிருக்கிறது.

இந்த சூழலில் ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் ஒருபுறமும் அதன் மீதான தாக்குதலுக்கு மறுபுறமும் அமெரிக்கா தயாராகி வருவது சர்வதேச அரசியலில் பதற்றமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய கிழக்கில் இதனால் நவம்பர் மாதம் பெருமளவில் பதற்றம் மூலம் என கணிக்கப்படுகிறது. ஏற்கனவே ஏமனில் ஹவுதி கிளர்ச்சியார்களுக்கும் சவுதிக்கும் இடையே பரஸ்பர தாக்குதல்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

நேற்று ஏமனில் ஹவுதி ஆளுகை பகுதியில் சவுதி நடத்திய டிரோன் தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT