உலகம்

போலந்து கல்லறையில் 5000 ஆண்டுகள் பழமையான 2 மண்டையோடுகள், 42 விலங்குகளின் பற்களால் செய்யப்பட்ட கழுத்தாணி கண்டெடுப்பு..!

தென்மேற்கு போலந்தில் உள்ள தொல்பொருள் ஆராய்சியாளர்கள் சுமார் 5000 ஆண்டுகள் பழமைவாய்ந்த புதைக்குழியை கண்டுபிடித்துள்ளனர்.

5000 ஆண்டுகள் பழமையான கழுத்தாணி

தென்மேற்கு போலந்தில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்ட இந்த கல்லறையில், ஒரு வயதுவந்த ஆணின் உடல், துளையிடப்பட்ட 42 விலங்குப் பற்களால் செய்யப்பட்ட ஒரு கண்கவர் கழுத்தாணி மற்றும் இரண்டு மனித மண்டையோடுகளின் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அந்த ஆண் அந்த கழுத்தாணியை முதலில் அணிந்தவராகவோ அல்லது அதன் உரிமையாளராகவோ இருந்திருக்கலாம் என்றும் ஆராய்சியாளர்கள் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழமையான சமூகம்

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அவர்களின் கோடைக்கால அகழ்வாராய்ச்சியின் இறுதிக் கட்டத்தை நெருங்கிக்கொண்டிருந்தபோது இந்த வரலாற்றுக்கு முந்தைய மேடு கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கண்டுபிடிப்பு மண்ணுக்கு அடியில் மிகப் பழமையான ஒரு சமூகம் இருந்ததற்கான சான்றுகளை வெளிப்படுத்தியுள்ளது. தொடர்ந்து கதிரியக்க கார்பன் சோதனை இன்னும் நடைபெற்று வந்தாலும், ஆராய்ச்சியாளர்கள் இந்தப் புதைகுழியை கி.மு. 2900-க்கு சற்று முந்தையது என தற்காலிகமாகக் காலக்கணிப்பு செய்துள்ளனர்.

பாவெல் டாப்ரோவ்ஸ்கி

ஸோராவினா தளத்தில் பணிபுரியும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு இந்தக் கண்டுபிடிப்பு கடும் ஆச்சரியத்தை அளித்ததாகவும் வ்ரோக்லா மருத்துவப் பல்கலைக்கழகத்தின்படி அவர்கள் இந்த ஆராய்ச்சியில் ஈடுப்பட்டிருந்தனர். இது குறித்து விரோக்லா மருத்துவப் பல்கலைக்கழகத்தின் மானுடவியலாளரும் உடற்கூறியல் நிபுணருமான பாவெல் டாப்ரோவ்ஸ்கி கூறும்போது,

இந்தக் கண்டுபிடிப்பு விலங்குகளின் எச்சங்களின் தற்செயலான தொகுப்பு அல்ல, மாறாக இது தெளிவாக மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு அலங்காரப் பொருள் போன்றே தெரிகிறது என்று கூறியுள்ளார்.

குறிப்பாக ஆரம்பகட்ட ஆய்வுகள் நாய் இனத்தை சார்ந்த விலங்குகள், கரடிகளின் ஆகியவற்றின் பற்களாக இருக்கலாம் என்று கூறுகிறது. விஞ்ஞானிகள் இன்னும் மனிதப் பற்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறை நிராகரிக்கவில்லை. மேலும் டிஎன்ஏ பரிசோதனை ஒரு தெளிவான பதிலை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய பதவி

ஒரு பெரிய மாலை ஒரு பெரிய பல் மாலை, ஆயுதங்கள் மற்றும் அதனுடன் வைக்கப்பட்டிருந்த பிற பொருட்களின் தொகுப்பை வைத்து அந்த மனிதன் தனது சமூகத்தில் ஒரு சிறப்பு அந்தஸ்தைப் பெற்றிருந்தானோ என்று ஆராய்ச்சியாளர்களை வியக்க வைத்துள்ளது.

மேலும் அவர் ஒரு வேட்டைக்காரராகவோ, போர்வீரராகவோ அல்லது வேறு ஏதேனும் ஒரு முக்கிய நபராகவோ இருந்திருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.

SCROLL FOR NEXT