

கார்பன் நிறுவனம் இந்திய ஸ்மார்ட்பன் சந்தையில் ரீ-என்ட்ரி கொடுக்க தயாராகி வருகிறது. உள்நாட்டு ஸ்மார்ட்போன் பிராண்டான கார்பன், தனது ரீ-என்ட்ரி குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. எனினும், கார்பன் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் இடம்பெற்றுள்ளன.
கீக்பென்ச் தகவல்களின் படி இந்த ஸ்மார்ட்போன் பல்வேறு ஸ்கோர்களை பெற்றுள்ளது. எனினும், இதன் சிறப்பம்சங்கள் கிட்டத்தட்ட ஒரேமாதிரியாகவே உள்ளன. புதிய ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம், ஆக்டா கோர் மீடியாடெக் சிப்செட் உடன் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.
கார்பன் நிறுவனத்தின் புதிய ZenZ ப்ரோ ஸ்மார்ட்போன் கீக்பென்ச் தளத்தில் இடம்பெற்றுள்ளது. டெஸ்டிங்கில் இந்த ஸ்மார்ட்போன் சிங்கிள் கோரில் 422 புள்ளிகளையும், மல்டி-கோர் டெஸ்டிங்கில் 1,525 புள்ளிகளையும் பெற்றுள்ளது.
மற்றப்படி புதிய ZenZ ப்ரோ மாடல் ஆண்ட்ராய்டு 16 ஓ.எஸ். உடன் வரும் என்றும் அதிகபட்சம் 6 ஜிபி ரேம் கொண்டிருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வெளியீட்டின் போது இந்த ஸ்மார்ட்போன் மேலும் சில வெர்ஷன்களில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம். தற்போது கீக்பென்ச் தகவல்களின் இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் MT6769V/CB ஆக்டா-கோர் சிப்செட் கொண்டிருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் வெளியீட்டின் போது இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ G70 பிராசஸர் கொண்டிருக்கும் என்பதை உணர்த்துகிறது. இத்துடன் மாலி-G52 MC2 GPU கிராஃபிக்ஸ் வழங்கப்படுகிறது.
கீக்பென்ச் தளத்தில் இடம்பெற்றுள்ள நிலையில், கார்பன் ZenZ ப்ரோ மூலம் இந்திய சந்தையில் கார்பன் பிராண்டு மீண்டும் களமிறங்குவது உறுதியாகிறது. எனினும், இதுபற்றி கார்பன் தரப்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில் இந்த ஸ்மார்ட்போன் வெளியீடு இதுவரை உறுதிப்படுத்த முடியாத நிலையிலேயே உள்ளது.
கார்பன் பிரான்டு முன்னதாக என்ட்ரி லெவல் ஃபீச்சர் போன், ஸ்மார்ட்போன், டேப்லெட், ஸ்மார்ட் டிவி மற்றும் மொபைல் போன் அக்சஸரீக்களை விற்பனை செய்து வந்தது. 2009-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கார்பன் மொபைல் நிறுவனம் புது டெல்லியை தலைமையிடமாக கொண்டு இயங்கி வந்தது.