இஸ்ரேல் வீரர்களுடன் நேதன்யாகு  
உலகம்

ஒரே ஆண்டில் இஸ்ரேல் ராணுவம், காவல்துறையில் 23 பேர் தற்கொலை - 16 ஆண்டுகளில் அதிகம்

போருக்கு முந்தைய பத்தாண்டுகளில், ராணுவத்தில் ஆண்டுக்கு சராசரியாக சுமார் 12 தற்கொலைகள் நிகழ்ந்தன.

கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரே ஆண்டில் இஸ்ரேல் ராணுவத்தில் தற்கொலைகள் பதிவாகி உள்ளன.

இஸ்ரேலிய ராணுவத்தில் இந்த ஆண்டு தற்கொலை செய்துகொண்ட வீரர்கள் மற்றும் அதிகாரிகளின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.

காசாவில் இஸ்ரேல் போரின் போது, ​​வழக்கமான மற்றும் ரிசர்வ் படைகளில் பணியாற்றிய 17 வீரர்கள் இந்த ஆண்டு ராணுவத்திலிருந்து விலகிய பின்னர் தற்கொலை செய்து கொண்டனர்.

மேலும், 2026ஆம் ஆண்டில் 5 காவல்துறை அதிகாரிகளும் தற்கொலை செய்து கொண்டனர்.

கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரே ஆண்டில் பதிவான தற்கொலைகளின் அதிகபட்ச எண்ணிக்கை இது என இஸ்ரேலிய செய்தித்தாளான ஹாரெட்ஸை மேற்கோள் காட்டி அல்ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

அதிகரிக்கும் தற்கொலை

2023 அக்டோபரில் காசா போர் தொடங்கியதிலிருந்து இஸ்ரேலின் பாதுகாப்புப் படையினரிடையே தற்கொலைகள் அதிகரித்து வருவதை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

போருக்கு முந்தைய பத்தாண்டுகளில், ராணுவத்தில் ஆண்டுக்கு சராசரியாக சுமார் 12 தற்கொலைகள் நிகழ்ந்தன.

SCROLL FOR NEXT