ஒரே பிரசவத்தில் 4 குழந்தை பெற்ற ஆஷாவுடன் உறவினர்கள். 
செய்திகள்

திருவனந்தபுரம் அருகே ஒரே பிரசவத்தில் 4 குழந்தை பெற்ற பெண்

திருவனந்தபுரம் அருகே ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை சுக பிரசவம் மூலம் ஆஷா பெற்றெடுத்தார். இதில் 2 ஆண் குழந்தைகள், 2 பெண் குழந்தைகள் ஆகும்.

மாலை மலர்

திருவனந்தபுரம்:

திருவனந்தபுரம் அருகே நெடுமங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜிதின். இவரது மனைவி ஆஷா. இந்த தம்பதிக்கு திருமணமாகி 2 வருடங்கள் ஆகிறது.

இந்த நிலையில் ஆஷா, கர்ப்பம் அடைந்தார். அவரை கணவர் மற்றும் உறவினர்கள் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தனர். டாக்டர்களும் ஆஷாவுக்கு சிகிச்சை அளித்தனர்.

பரிசோதனையில் ஆஷாவுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் உருவாகி இருப்பது தெரிய வந்தது. இதனால் அவருக்கு டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் ஆஷாவுக்கு பிரசவம் நடந்தது. அடுத்தடுத்து 4 குழந்தைகளை சுக பிரசவம் மூலம் ஆஷா பெற்றெடுத்தார். இதில் 2 ஆண் குழந்தைகள், 2 பெண் குழந்தைகள் ஆகும்.

தற்போது குழந்தைகளும், தாயும் நலமுடன் உள்ளனர். ஆஷாவின் கணவர் ஜிதின் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். அவருக்கு 4 குழந்தைகள் பிறந்த மகிழ்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரும் விடுமுறை எடுத்துக் கொண்டு விரைவில் ஊருக்கு வருவதாக மனைவியிடம் போனில் பேசி தகவல் தெரிவித்துள்ளார்.