சென்னை:
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது சேகர்பாபு (தி.மு.க.) பேசுகையில், தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த ஆண்டு பிளஸ்-2 மாணவர்களுக்கு கணினி (லேப்-டாப்) வழங்கப்படவில்லை.
இந்த ஆண்டு கல்லூரிகளில் சேர்ந்து கணினி வகுப்பை தேர்வு செய்த ஏழை-எளிய மாணவர்களுக்கு கணினி இல்லாததால் படிப்பு பாதிக்கப்படுகிறது. எனவே கடந்த ஆண்டு பிளஸ்-2 மாணவர்களுக்கு கணினி உடனடியாக வழங்க வேண்டும் என்றார்.
இதற்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளிக்கையில், ‘உயர்நீதிமன்றத்தில் தடை உள்ளதால் தடை நீக்கப்பட்ட பிறகு வழங்கப்படும்’ என்றார்.