செய்திகள்

போயஸ் கார்டன் அசுத்தமாக இருந்ததா? தமிழக காங். தலைவர் கேள்வி

போயஸ் கார்டன் சுத்தமாக்கப்படுவதாக அன்வர் ராஜா கூறியதில் இருந்து அது ஏற்கனவே அசுத்தமாக இருந்ததா? என காங்கிரஸ் தலைவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

சென்னையில் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தங்களின் கோயிலாக கருதப்படும்  போயஸ் கார்டனில் சோதனை நடத்தியிருப்பது தங்களுக்கு வேதனை தருவதாக அ.தி.மு.க. நிர்வாகிகள் கூறுகின்றனர்.

இந்த சோதனையானது ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை சுத்தப்படுத்த உதவியாக இருக்கும் என அன்வர்ராஜா எம்.பி. கூறினார். அப்படியென்றால் ஏற்கனவே போயஸ் கார்டன் அசுத்தமாக இருந்ததா? என காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது.

இதுபற்றி தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கூறுகையில், ‘வருமான வரித்துறை சோதனை மூலம் போயஸ் கார்டன் இல்லம் சுத்தமாக்கப்படுவதாக அன்வர் ராஜா கூறுகிறார். எனவே, போயஸ் கார்டன் ஏற்கனவே அசுத்தமாக இருந்ததா?