ஜல் ஜீவன் திட்டம் 
செய்திகள்

மத்திய பட்ஜெட்- ஜல் ஜீவன் திட்டத்திற்கு ரூ.3.6 லட்சம் கோடி ஒதுக்கீடு

மத்திய பட்ஜெட்டில் ஜல் ஜீவன் திட்டத்திற்கு ரூ.3.6 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

மாலை மலர்

புதுடெல்லி:

பாராளுமன்றத்தில் இன்று நிதி மந்திரி தாக்கல் செய்த பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் வருமாறு:-

தொழில் மற்றும் வர்த்தக மேம்பாட்டுக்கு ரூ.27300 கோடி ஒதுக்கீடு.
சென்னை - பெங்களூரு இடையே வர்த்தக வழித்தடம். 
விவசாயிகளுக்கு 15 லட்சம் கோடி கடன் தர இலக்கு . 
விவசாய பொருட்களை கொண்டு செல்ல ரயில்களில் தனி வசதி.
நபார்டு வங்கி மூலம் மறுகடன் திட்டம் விரிவுபடுத்தப்படும்.
சிறு ஏற்றுமதியாளர்களக்கு உதவ நிர்விக் என்ற திட்டம் கொண்டு வரப்படும்.

ரூ.102 லட்சம் கோடியில் 6500 உட்கட்டமைப்பு திட்டங்கள் ஏற்படுத்தப்படும். 
போக்குவரத்து கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ.1.7 லட்சம் கோடி ஒதுக்கீடு.
மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைக்கு ரூ.22000 கோடி ஒதுக்கீடு.
தேசிய சரக்கு போக்குவரத்து கொள்கை விரைவில் அறிவிக்கப்படும்.

ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் தனியார் பங்களிப்புடன் புதிய மருத்துவமனைகள் கட்ட திட்டம்.
தூய்மை இந்தியா திட்டத்திற்கு ரூ.12 ஆயிரத்து 300 கோடி ஒதுக்கீடு.
ஜல் ஜீவன் திட்டத்திற்கு ரூ.3.6 லட்சம் கோடி ஒதுக்கீடு.

27 ஆயிரம் கிமீ தூரத்திற்கு ரெயில் பாதை மின்மயமாக்கப்படும்.
பெங்ளூரில் புதிய புறநகர் ரெயில் திட்டம் செயல்படுத்தப்படும்.
சுற்றுலா தலங்களை இணைக்கும் வகையில் கூடுதல் தேஜஸ் ரெயில்கள் இயக்கப்படும்.

2021ஆம் ஆண்டுக்குள் 108 மில்லியன் மெட்ரிக் டன் பால் உற்பத்தி இலக்கு.
2023ஆம் ஆண்டுக்குள் 200 லட்சம் டன் மீன் உற்பத்தி செய்வதற்கான இலக்கு.
ஒருங்கிணைந்த சமூக நலத்துறை திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
ஊரக வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.1.23 லட்சம் கோடி இலக்கு.
சிறு நகரங்களுக்கும் மருத்துவ வசதி கொண்டு செல்வதற்கான விரிவான திட்டங்கள்.