தமிழ்நாட்டின் முதலமைச்சராக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் பதவியேற்றுள்ள நிகழ்வு குறித்து, முன்னாள் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் தெரிவித்துள்ள கருத்து, தற்போது இணையத்தில் பிரளயத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு 120 வேட்பாளர்களின் பெரும்பான்மை பலத்தோடு, த.வெ.க தலைவர் விஜய், நேரு உள்விளையாட்டு அரங்கில் ஆளுநர் அர்லேகர் முன்னிலையில் முதலமைச்சராக பதவி ஏற்றுக்கோண்டார்.
இந்த நிகழ்வில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த அன்ஷூல் கம்போஜின் முகச்சாயலில் இருந்த காவலரை வட்டமிட்டு, தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அஷ்வின், “கடமை தான் எப்போதும் முக்கியம், இருந்தாலும் இன்று நடைபெறும் சென்னை அணியின் வாழ்வா சாவா போட்டியில், நீங்கள் நிச்சயம் கலந்துகொண்டு விளையாட வேண்டும்” என்று குறிப்பிடுள்ளார்.
இந்த பதிவிற்கு கமெண்ட் செய்துள்ள நெட்டிசன்கள், தளபதி விஜயின் அமைச்சரவையில் இருந்து அன்ஷூல் கம்போஜ் விலகியுள்ளதாகவும், மேலும் அவர் சேப்பாக்கத்தில் நடைபெறும் சென்னை அணியுடன் இணைந்து விட்டதாகவும், கிண்டலாக கமெண்ட் செய்து வருகின்றனர்.