தலைப்புச்செய்திகள்

இது கனவா நனவா? விஜய்யை வாங்க என அழைத்த உதயநிதி

முதலமைச்சர் மனம் பூரித்து புன்னகைத்தபடி கைகூப்பி உதயநிதிக்கு வணக்கத்தை தெரிவித்தார்.

சட்டசபை கூட்டத்தின் 2-வது நாள் அமர்வு இன்று தொடங்கியது.

சபாநாயகர் தேர்தலில் ஆளும் கட்சியான த.வெ.க. சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் வெற்றி பெற்ற ஜே.சி.டி.பிரபாகர் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தார். அவரை எதிர்த்து வேறு யாரும் மனு தாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றி தேர்வானார். சட்டசபை துணை சபாநாயகராக ரவிசங்கர் தேர்வு செய்யப்பட்டார்.

இதனைதொடர்ந்து பேரவை தலைவரை மரபு படி அவர் இருக்கையில் அமரவைக்க வேண்டும் என்பதால் பேரவையின் முன்னவர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் பேரவைத்தலைவரை அழைத்துவந்து அமர வைக்க வேண்டும் என்று தற்காலிக சபாநாயகர் கேட்டுக்கொண்டார்.

அவையின் முன்னவர் அமைச்சர் செங்கோட்டையன் உடனடியாக எழுந்து முன்வந்தார். பின் எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் உடன் வந்தார். இந்த மரியாதையின் நிமித்தமாக சபையில் உள்ள அனைவரும் எழுந்து நிற்குமாறும் வலியுறுத்தப்பட்டது.

முதலமைச்சர் விஜய்யை அழைக்கும்படி உதயநிதி செங்கோட்டையனிடம் கேட்டார். இருப்பினும் பரவாயில்லை தாமே அழைத்து செல்லுமாறு முதலமைச்சர் செங்கோட்டையனுக்கு வழி விட்டார்.

இந்நிகழ்வு முடிந்து உதயநிதி கீழே இறங்கும் போது முதலமைச்சர் மனம் பூரித்து புன்னகைத்தபடி தாமாகவே கைகூப்பி உதயநிதிக்கு வணக்கத்தை தெரிவித்தார். இருவரும் ஒருவரையொருவர் வணங்கி தத்தம் இருக்கையில் அமர்ந்தனர்.