தலைப்புச்செய்திகள்

முதலமைச்சர் விஜய்க்கு z+ பாதுகாப்பு..

முன்னதாக Y பிரிவு பாதுகாப்பு வழங்கிய நிலையில் இன்றிலிருந்து Z+ பாதுகாப்பு மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது.

2026 சட்டமன்றத் தேர்தலில் சி. ஜோசப் விஜய் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ளார் மற்றும் அவருக்கு உயர்மட்டப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக Y பிரிவு பாதுகாப்பு வழங்கிய நிலையில் இன்றிலிருந்து Z+ பாதுகாப்பு மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது. இதில் 55 மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் 24 மணி நேரமும் முதலமைச்சருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

Z+ பாதுகாப்பு என்பது இந்தியாவில் வழங்கப்படும் மிக உயர்ந்த அளவிலான பாதுகாப்பாகும். இது பெரும்பாலும் முதலமைச்சர்கள், உயர்மட்ட அரசியல்வாதிகள் மற்றும் கடுமையான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் முக்கியப் பிரமுகர்களுக்கு வழங்கப்படுகிறது.

இந்த அடுக்கில் பொதுவாக 55 வீரர்கள் இருப்பார்கள்; இதில் NSG-யின் உயரடுக்கு கமாண்டோக்கள் மற்றும் மாநில காவல்துறையினர் அடங்குவர்.

உதாரணமாக, குறிப்பிட்ட மாநிலத் தலைமைகளுக்காக 36 கமாண்டோக்கள், 2 காவல் கண்காணிப்பாளர்கள் (SP), 2 உதவி காவல் கண்காணிப்பாளர்கள் (ASP) மற்றும் 4 துணை காவல் கண்காணிப்பாளர்கள் (DSP) பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

முதலமைச்சர் விஜய்க்கு புல்லட் பேரொபி கார்கள், பைலட் வாகனங்கள் மற்றும் 24x7 பாதுகாப்பும் இதில் அடங்கும். மேலும் முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு ஹெக்லர் & கோச் MP5 துணை இயந்திரத் துப்பாக்கிகள் போன்ற நவீன ஆயுதங்கள் வழங்கப்படுகின்றன.